Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:31:23 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 3
#KOTWART013
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 10, 2011
நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்
இந்த பக்கம் 3224 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ...

சமூக ஒழுக்கம் என்பது தனிமனித ஒழுக்கத்தினாலேயே ஏற்பட முடியும்.எனவே,நாம் தேர்ந்தெடுக்கும் நகராட்சி உறுப்பினர்களின் தனிமனித ஒழுக்க நெறிமுறைகள் முறையானதாக இருந்தால் மட்டுமே நம் ஊருக்கும் ,நம் சமுதாயத்திற்கும் இந்த நகராட்சி பயனுள்ளதாகவும் மேலும் குற்றங்களை தடுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

பணத்தை வாங்கி கொண்டு உங்கள் வாக்குகளை தவறான நபருக்கு வாக்களித்து விடாதீர்கள்.தட்டை காட்டி போட்டதை வாங்கி கொள்ளும் பிச்சைகாரன் நிலையும் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வாக்காளன் நிலையும் ஒன்று தான். எதையும் கேட்க முடியாது. அம்மா அந்த பிரிட்ஜில் இருக்கும்கெட்டித்தயிரை எடுத்துப் போடுங்கள்!’’ என்று பிச்சைக்காரன் உரிமையுடன் கேட்கவா முடியும்? தருவதை அனுபவித்து நிறைவுறும் திருவோட்டை பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை

நாமாக‌ பார்த்து திருந்தாவிட்டால் சமூக மாற்றம் வராது என்பது மட்டும் உண்மை.

* திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"என்ற கவிஞரின் வைர‌வரிகள் தான் நினைவுக்கு வரும். இருப்பினும் கீழ்கண்ட சட்டங்கள் இயற்றினால் தான் தனி மனித ஒழுக்கம் வளரும் குற்றங்கள் குறையும் நாம் எதிர் பார்க்கும் நகராட்சி அமையும்.

* தனிமனித ஒழுக்ககேட்டிற்கு அடித்தளம் இடுகின்ற அனைத்து போதை வஸ்துக்களும் உடனடியாக தடை செய்யப்படவேண்டும்.இதை செய்ய கூடிய ஆற்றல் கொண்டவரையே நாம் நகராட்சிக்கு தேர்தெடுக்க வேண்டும்.

* உடல்ந‌லத்திற்கும் உலக சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கின்ற தேவையற்ற, தர‌மற்ற பொருள்கள் தயாரிப்பதற்க்கும் விற்பதற்கும் தடைவிதிக்கவேண்டும். மேலும் உயிர்கொல்லி நோயான புற்று நோயை பரப்பும் DCW நிறுவனத்தை மூட கடுமையாக போராடும் நகராட்சியாக நம் நகராட்சி அமைய வேண்டும்.

* நமதூர் நகராட்சியில் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க வேண்டும் , குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் , குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய லஞ்சம், சாலை போடுவதில் ஊழல் .. இப்படி பல விசயங்ககளில் லஞ்சமும் , ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றது . முதலில் இவற்றை நம் நகர்மன்றம் சரி செய்தாலே எல்லாம் சரி ஆகிவிடும்.

* நமதூர் நகராட்சி நம்முடைய கடற்கரை விசயத்தில் மிகவும் அக்கறை கொள்ள வேண்டும். சமீப காலமாக கடற்கரையில் செய்த மாற்றங்களால் மாற்று மத சகோதர்களும் , வெளி ஊர் வாசிகளும் அதிக அளவில் வர தொடங்கிவிட்டனர். இவற்றினால் நாம் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியதிருக்கின்றது .ஆகையால் நம் நகர்மன்றம் இவ்விசயத்தில் மிக கவணம் எடுத்து இதனை கண்காணிப்பதற்காக தனிப்படை மற்றும் காவல் படை ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

* வெளியூர்களை காட்டிலும் நமதூரில் ஆட்டோ கட்டணம் பன்மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவிற்கு போவதற்கே அதிக தொகை கேட்கின்றனர்.அரசு பெட்ரோல் விலையை ஒரு ரூபாய் உயர்த்தினால் இவர்கள் ஆட்டோ கட்டணத்தை ஐந்து ரூபாய் உயர்த்துகின்றனர்.நம் நகர்மன்றம் இந்த ஆட்டோ கட்டணங்களுக்கு ஒரு விலை வரம்பு கொண்டு வர வேண்டும். அதையும் மீறி அவர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் ஊரில் ஆட்டோ ஓட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும்.

* நமதூர் நகர்மன்றத்தில் உறுப்பினர்கள், தலைவர் இவர்களை தவிர்த்து நகராட்சியில் அலுவலக பணிகளில் பெரும்பாலும் இருப்பவர்கள் வெளியூர் வாசிகளே.. ஏன் இந்த நிலை ..?? நம்மூரில் திறமையான படித்த பலர் இருக்கும் பொழுது அவர்களுக்கு நம் நகராட்சியில் பணி கொடுக்கலாமே...?

முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் குறைந்தது நம் நகராட்சியையாவது நாம் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டாமா..! அதில் உள்ள குற்றங்களையும் தவறுகளையும் மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியதில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது.

நீ வெற்றியடைய விரும்புகிறாய்
ஆனால் அதற்குரிய பாதையில் செல்லவில்லை
நிச்சயமாக படகு தரையில் ஓடாது


என்று ஒரு அரபுக் கவிஞன் கூறினான்.

அதுபோல நம் நகர்மன்றம் சரியான பாதையில் சென்றால் தான் நம் நகர்மன்றத்திற்கு நிகர்மன்றம் எதுவுமில்லை என்று மார் தட்டலாம் வாருங்கள், இணைந்து செயல்படுவோம்! சிறந்ததொரு நகர்மன்றத்தை உருவாக்குவோம்..!!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Syed Mohmed Fasi (AL Khobar) on 14 August 2011
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20853

Really nice to read his artical.He has given very good idea how to improve our place specially for our beach.Now a days Neighbours are increased to visit our beach.But peoples are afraid to sit because of rubbish dumbbed in the sand.Our panchat will monitor this things and take action regarding this matter.Secondly he emphasized how to avoid corruption.Really he gave useful things.

Best regards

Syed Mohamed Fasi
AL Khobar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: vsm ali (Kangxi, Jiangmen , China) on 15 August 2011
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20856

அஸ்ஸலாமு அழைக்கும்..

தங்களின் கட்டுரை நன்று . சமூக ஒழுக்கம் , நாம் தேர்ந்தெடுக்கும் நபரை பொருத்தது. இறைவனுக்கு அச்சம் உள்ளவர் , எண்ணத்தில் சுத்தம் உள்ளவர் , பிரதி பலன் எதிர்பாராதவர் இவர்களே தகுதியான மன்ற உறுப்பினர் . நல்ல உறுப்பினர்கள் இருந்தால் மட்டும் போதுமா ? மக்கள் ஒத்துழைக்க வேண்டுமே ? " திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " நல்ல வரிகள் . இன்று பல வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி , வசதியற்றவர்களுக்கு " அவர்களின் கண்ணீரையே " தண்ணீராக கொடுக்கும் அவல நிலை. வீடு கட்டுகிறேன் , கான்க்ரீட் போடுகிறேன் என்று சொல்லி , எப்போதோ நடக்க வேண்டிய வேலைக்கு , இப்போதே கற்கள் , மணல் போன்றவற்றை தெருவில் போட்டு , நகரை அலங்கோலமாக்கி வைக்கின்றனர். இதையெல்லாம் ஒரு நகராட்சி உறுப்பினர் வீடு வீடாக போய் பார்க்க சாத்தியமா ? ஒவ்வொரு தனி மனிதனும் , இப்படி செய்வது தவறு என்று வருந்த வேண்டும்.

அடுத்து தாங்கள் குறிப்பிட்ட போதை வஸ்துக்கள் தடை , ஆட்டோக்காரர்களின் வரம்பு மீறல்கள் கடுமையான சட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இதில் கூட்டாளி , சொந்தக்காரன் என்று முகதாட்சண்யம் பாராமல் , நகராட்சிக்கென்று உள்ள சட்டத்தின் மூலம் சரி செய்ய முயல வேண்டும்.

அடுத்து , கடற்க்கரை . இது பொது சொத்து . எல்லா மதத்தினரும் , எல்லா ஊர் காரர்களும் வருவார்கள் . நாம் தடை பண்ண முடியாது. .காவல்துறை மூலமே வரம்பு மீறுபவர்களை கண்டிக்க வேண்டும். மற்றபடி , கலாச்சாரம் , கண்ணியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை . நாம் கண்ணியமாக நடந்து கொண்டால் , பிறர் நம்மை சீண்ட மாட்டார்கள்.

அடுத்து DCW பற்றி எழுதி இருக்கிறீர்கள். புற்று நோய்க்கு இது மட்டும்தான் காரணமா ? நமது ஊரின் உணவு , மேலும் பல காரணங்கள் உண்டு. DCW வை மட்டுமே சாடும் நாம் , இதில் கிடைக்கும் வருவாயை பற்றி வாய் திறப்பதில்லை . மேலும் , சமீபத்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டின் மலரை பார்த்தேன் . DCW விளம்பரத்தை பெற்றிருந்தார்கள். இப்போது மட்டும் DCW இனிக்கிறதா ? நாட்டின் பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண்மணிக்கு புற்று நோய் என்று செய்தி . அவர் எப்போதாவது DCW பக்கம் தலை காட்டி இருப்பாரா ? பின் , அவருக்கு எப்படி இந்த நோய் வந்தது ?

இது என்னுடைய கருத்து . நாம் தேர்ந்தெடுக்கும் நபர் , ஊரிலேயே இருந்து வியாபாரம் செய்பவராகவும் , பொது நலத்தில் ஆர்வம் உள்ளவராகவும் , நடுத்தர வயதுடையவராகவும் , இருப்பது நல்லது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Kayal Shams (Abu Dhabi) on 16 August 2011
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20863

தங்களின் கட்டுரை நன்று ....!

நாம் தேர்ந்தெடுக்கும் நப இறைவனுக்கு அச்சம் உள்ளவர் , எண்ணத்தில் சுத்தம் உள்ளவர் , பிரதி பலன் எதிர்பாராதவர் இவர்களே தகுதியான மன்ற உறுப்பினர்..

தன்னலம் கருதா பிறர் நலம் பேணக்கூடிய ஒருவரால் மட்டுமே இது முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: குல்குஸ்மா முத்துவாப்பா... (???-?????) on 16 August 2011
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20865

நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ..... இந்த சிறியவனின் கட்டுரைக்கு மதிப்பளித்து வெளியிட்ட காயல்பட்டணம் .காம் குழுவினற்கும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னுடையை கட்டுரைக்கு கருத்து எழுதிய நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

VSM அலி காக்கா அவர்களின் கருத்துக்களை தனியாக எடுத்துப் போட்டாலே தனி கட்டுரையாக அமைந்து விடும் அவ்வளவு அருமையாக இருந்தது .

சமூக ஒழுக்கம் உள்ள நபரை தேர்ந்தெடுத்தால் நம் மக்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பது எனது கருத்து. மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது , மணல் போன்றவற்றை தெருவில் கொட்டுவது எல்லாம் கண்டிப்பாக தடுக்க வேண்டும் . தனி மரம் தோப்பாகாது ,நாம் அனைவரும் சேர்ந்து கை கோர்க்க வேண்டாம் , நம் கை கொண்டு நம் குடும்பங்களில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை தடுத்தாலே போதும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மின்சார பில் கெட்டவில்லை என்றால் எப்படி பியூசை பிடுங்குகிறார்களோ, அது போல தான் ஆட்டோ காரர்களை சரி செய்தாலே அதன் உரிமையாளரும் ஒரு வழிக்கு வந்துவிடுவார்.

DCW மூலம் நமதூர் மக்களுக்கு புற்று நோய் பரவுவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ள தெளிவாக தெரிந்த ஒன்று . வருவாய் வருகின்றது என்பதற்காக தங்க ஊசியை எடுத்து கண்ணை குத்த முடியாது அல்லவா ..? , தாங்கள் குறிப்பிட்டது போல் மாநாட்டு மலரில் DCW விளம்பரம் போட்டிருந்தார்கள் நானும் பார்த்தேன் . அதனால் தான் DCWவிற்கு எதிராக குரல் கொடுக்கும் நபரை நாம் தேர்தெடுக்க வேண்டும் என்று கூறுகின்றேன் ... நான் நமதூரில் புற்று நோய் பரவுவதற்கான ஒரு காரணம் DCW என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர இந்தியாவிற்க்கு அல்ல .. காயல் பட்டணத்தில் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை என்று நம் நகராட்சி மீது குறை சொன்னால் , டெல்லியிலும் தான் தெரு விளக்கு சரியாக எரியவில்லை அதற்கும் நம் நகராட்சி தான் காரணமா என்று தாங்கள் கேள்வி கேட்டால் நான் என்ன பதிலளிப்பது சிரிப்பதை தவிர ...?

தாங்கள் சொல்வது போல் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் , ஊரிலேயே இருந்து வியாபாரம் செய்பவராகவும் , பொது நலத்தில் ஆர்வம் உள்ளவராகவும் , நடுத்தர வயதுடையவராகவும் , இருப்பது நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: vsm ali (Kangxi , Jiangmen , China) on 17 August 2011
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20868

சலாம் காக்கா .

நான் ஏதாவது கருத்து சொன்னால் , நம்மில் பெரும்பான்மையோர் அதை பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளும் இந்த வேளையில் , நீங்கள் என்னுடைய கருத்தை , சற்று புகழ்வதாக தோன்றுகிறது .

இருப்பினும் DCW விவகாரத்தில் , நீங்கள் சிரிப்பதை விட சற்று சிந்தித்து இருக்கலாம். தங்களின் முதல் வரியில் " உள்ளங்கை நெல்லிக்கனி " என்று கூறி , புற்று நோய்க்கு DCW தான் காரணம் என்று உறுதியாக சொல்கிறீர்கள். பிறகு DCW உம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். இரண்டில் நான் எதை எடுத்துக்கொள்வது . " உள்ளங்கை நெல்லிக்கனி " என்று எடுத்துக்கொண்டால் , நம் ஊர் , மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அல்லவா புற்று நோய் வர வேண்டும். தங்க ஊசியால் கண்ணை குத்த முடியாதுதான் , ஆனால் அந்த ஊசியைக்கொண்டு பிற பயன்களை அடையலாம். நீங்கள் என்னை புகழ்ந்த போது சற்று மகிழ்ச்சி அடைந்தது என்னவோ உண்மை . ஆனால் சிரித்தேன் என்று சொன்னபோதும் கூட அந்த மகிழ்ச்சி சற்றும் குறையவில்லை . ஏனெனில் நன்கு படித்த நீங்கள் சிரிக்கும்போது , அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் . படித்தவர்களை மதிப்பவன் நான், என்னுடைய ஒருசில கருத்துக்களை நீங்களும் ஏற்றுக்கொண்டுள்ளதற்கு நன்றி .

vsm ali ,

kangxi , jiangmen . china

+ 86 13189682842


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Cnash (Makkah ) on 20 August 2011
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20874

நமதூரில் பரவிவரும் கேன்சருக்கு DCW ஒரு முக்கியமான காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. CFFC யின் ஆய்வும் மற்ற ஆய்வுகளும் அதை உறுதி செய்தாலும் கூட அதை எதிர்த்து போராட முடியாத நகராட்சியை மாற்றும் நடவடிக்கை தான் இந்த கட்டுரையின் நோக்கம். உணவு பழக்கம், வாழ்கை முறை மாற்றம் இது எல்லாம் சிறு காரணங்களாக இருக்கலாம். அதற்காக சம்பந்தமே இல்லாமல் அமெரிக்காவில் கென்னடி கேன்சர்லே இறந்தார், லண்டன் லே JADE GOODY கேன்சர்லே செத்தார், அவர் DCW கு வந்ததில்லை சொல்லுறதுக்கு பதில் என்ன சொல்ல !!!!!!!!!!

காயல்பட்னத்தில் ரோடுலே ஆக்சிடென்ட் அதிகமா நடக்குது அதுக்கு மினி பஸ் ஸ்பீடா போறது தான் காரணம்டு கம்ப்ளைன்ட் பண்ணுனா,,...லண்டன்லே டயானா ஆக்சிடென்ட் ஆனா அவங்க காயல்பட்னம் பக்கமே வந்தது இல்லைடு சொல்லுறமாறி தான் இருக்குது!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Meera Sahib (kayalpatnam) on 31 August 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20885

அஸ்ஸலாமு அலைக்கும்

மிகவும் சிறந்த ஆழ்ந்த கருத்துக்கள்!

நமதூர் சேவை அமைப்புகள் ஒன்று சேர்ந்து நமக்கு நாமே ஒரு காயல் லோக்பால் சட்டத்தை உருவாக்கி செயல்படுத்தினால் லஞ்சம் ஒழியும் உறுப்பினர்களிடம் ஒரு பயம் ஏற்படும் . ஆனால் லஞ்சம் வாங்கமாட்டோம் லஞ்சம் கொடுக்கமாட்டோம் என உறுதிமொழி நாம் அனைவரும் எடுக்கவேண்டும் . அப்படி செய்தால் வீடு கட்ட பிளானுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை , தண்ணீர் இணைப்புக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை இறந்த பிறந்த சர்டிபிகேட்டுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை !

எனவே நாம் தேர்ந்தெடுக்கும் நபர் லஞ்சம் வாங்கதவராக , தன்னிறைவு பெற்றவராக இருத்தல் அவசியம் எனவே நன்றாக சிந்தித்து தேர்ந்தெடுப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Abul hassan (Abu Dhabi) on 29 September 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20892

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல அருமையான கருத்துக்கள். kaka சொன்ன படி நம்ம ஊர் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடற்கரை விசயத்தில் ஊர் ஜமாஅத் ஒன்று kudi ஒரு முடிவு எடுக்க வேண்டும். கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். வரகூடிய சீரழிவை தடுத்து விடலாம்

அபுல் ஹசன், ETA EMCO
அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved