12.5 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு - 4.8 சதுர மைல், (32,664 - 2001 கணக்கெடுப்பின் படி) தற்போது சுமார் 50000க்கு மேல் மக்கள் தொகை,
நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய, மிக தொன்மையும் பழமையும் வாய்ந்த காயல்பட்டிணம். ஈகையின் உதாரணம். பதவிகளும்
பட்டங்களும் இல்லாமல் சிறு மக்கமாய் மாற்றிய பெறுமை.....இன்றும் வரலாற்றின் ஏடுகளில் காயல்பட்டிணம் என்பது போற்றத்தக்க
பக்கங்களாகவே தன்னை பதிவு செய்துள்ளது. இத்தனைக்கும் காரணம்.....மறைந்தும் வாழும் நம் முன்னோர்களின் சுய நலமற்ற அகன்ற
பார்வையே.
தலைவர்களாய் - தனது நேர்மைகளையும்
செல்வந்தர்களாய் - தனது சொத்துக்களையும்
கல்வியாளர்களாய் - தனது ஞானத்தையும்
நகர வாசிகளாய் - தனது விசுவாசத்தையும்
பாகு பாடின்றி பகிர்ந்து அளித்ததே.....காரணம்.....
உலக மயமாதல் என்ற சுனாமியில -(நவீன மயமாதல் -பெரிய இழப்புகள்-இது ஒரு தனி கட்டுரை-அதனால் உலக மயமாதல் என்ற ஒற்றை
வார்த்தையில் முடித்துள்ளேன்) தொலைந்து போன பொது நலத்தை தேடும் பயணமாகவும், வரும் சமுதாயத்திடம் இருந்து மாறாத பயனாக
அவர்களின் துஆக்களை பெறும் முயற்சியாக நம் செயல்பாடுகள் அமையும் பட்சத்தில் ஒரு முன்னுதாரண நகரமாக நமதூரை மாற்றிவிட
முடியும்.
இதற்கு முதன்மையாக சில கருத்துக்களை நான் உங்கள் முன்னால் பதிவு செய்கிறேன்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலையில், அவர்களை தேர்ந்தெடுக்கும் சக்தி மக்களிடம் இருந்த
போதிலும், நல்ல போட்டியாளர்களை மக்களுக்கு அறிமுக படுத்தும் முதல் கடமை ஜமாத்திற்கே என்று நான் கருதுகிறேன்.
அதன் அடிப்படையில், ஒரு ஜமாத்தின் பொறுப்புகள்
1. மன்ற உறுப்பினர்களாக போட்டியிட விரும்புவர்களிடமிருந்து, வார்டின் தற்போதைய குறைகள், தற்போதைய தேவைகள், அவற்றை நிறைவேற்ற
அவர்களின் செயல்திட்டங்கள் என்ன? அவற்றின் கால அளவு? பதவி காலத்தில் வார்டு முன்னேற்றத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்த செயல்
திட்டங்கள் அகியவற்றைப் பெற்று ஜமாத் உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவைகளில் சிறந்த செயல் திட்டங்களை அளித்தவர்களை
பட்டியலிட்டு அவர்களை போட்டியிட தெரிவு செய்யலாம்.
*** நன்றாக கவனத்தில் கொள்ளவும்......அன் அப்போஸ்ட் தேர்வு அல்ல....நல்ல போட்டியாளர்களை மக்களுக்கு இனம் காட்டினால்
போதும்
2. சொந்தம், பந்தம் என்ற உணர்வை மறந்து வார்டின் நன்மைகளை மட்டும் முதன்மையாய் கருதுவது
3. தன்னிறைவு பெற்ற மனிதர்களை முன்னிறுத்துவது... தன்னிறைவு என்பதின் பொருள் : பணத்தால், உடல் வ்லிமையால் பிறரை சார்ந்து
இருக்கும் நிலையற்று இருப்பது
4. கண்டிப்பாய் தொழுகையை பேணுபவராய் இருத்தல் வேண்டும்.-ஜமாத்தின் பங்கு என்று சொல்லிவிட்டு இதை மறந்து விட்டால் எப்படி?
உறுப்பினராய் போட்டியிட விரும்புப்வர்களுக்கு :
1. முதலில் நம் நகரை பற்றிய முழுமையான அறிவை பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும்
2. தங்களது வார்டின் தற்போதைய தேவைகள் என்னென்ன? அதில் உடனடியாக நிறைவேற்ற வேண்டியவைகள் எவை?
முக்கிய பணிகளான,
புதிய சாலைகள் அமைப்பது,
முன்பு இருந்த பழைய சாலைகளை பழுது பார்ப்பது,
மின் விள்க்குகள் அமைப்பது,
சுற்றுப்புர சூழலை பாதுகாப்பது,
மரங்கள் நடுவது,
குப்பை, கூலங்கள் இல்லாமல் பாது காப்பது,
சுகாதாரம்,
குடி நீர் வசதி செய்தல்,மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைப்பது, விளையாட்டுத்திடல்கள்,
பூங்காக்கள் அமைப்பது,
நூலகங்கள் உருவாக்குவது.
மேற்கண்ட பணிகளில் முழுமையான அறிவு பெற்றிருத்தல். அதை செயல் படுத்துவதில் விவேகம். வார்டு முன்னேற்றத்திற்காக எதயும் எவரையும்
சந்திக்கும் துணிவு
அத்தோடு,
சில சமுதாய முன்னேற்றங்களுக்கும்,-கல்வி, மருத்துவம்,முதியோர் பாதுகாப்பு, போன்றவற்றில் ஏற்கனவே உள்ள சமுதாய அமைப்புகளோடு
சேர்ந்து பணியாற்றி, தனது வார்டில் தனது பதவிக்காலங்கள் முடிந்தும் தனது பெயரை மக்கள் மனதில் பதிவு செய்தல்.
3. தங்களுடைய வார்டின் எதிர்கால நன்மைக்கான திட்டங்கள் - அதை நிறைவேற்றுவதற்கான விபரங்களை மக்களுக்கு தெரிவித்தல்
4. தனது சொத்து விபரங்களை வெளியிடும் துணிவு.
5. இதுவரை மக்களுக்காக உழைத்ததின் பிண்ணனி
6 .பொதுச்சேவையில் அனுபவம்-
7. எதற்காக வேண்டியும், எந்த சூழ் நிலையிலும் எவரிடமும் கையேந்தாத சுத்தம்.
8. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, என்ற பழைய, போலித்தனமான விளம்பரத்தை துறந்து, உண்மையான வார்டு தேவைகளை பட்டியலிட்டு, அதை
நிறைவேற்றும் செயல் திட்டங்களோடு மக்களை சந்தித்தல்.
வாக்காளர்களுக்கு,
1. தங்களது வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் கொண்ட நீங்கள் முதலில் உங்களது வலிமையை உணர வேண்டும்.
2. தங்களுக்கு பிடிக்காதவராய் இருப்பினும், பொது வாழ்வில் தூய்மையாளர்களை அடையாளம் காட்டுதல்.
3. இலவசங்கள், பணத்திற்கு மயங்காத நிலை- நம் பணத்தை எடுத்தே நமக்கு தருகிறார்கள் என்ற உண்மையை உணர்தல்.
4. போலியான வார்தைகளுக்கு மயங்காமல், திட்டங்கள், அதை நிறைவேற்றும் முறை ஆகியவைகளை கேட்டு தேர்வு செய்தல்.
இறுதியாக,
கிங் மேக்கர்ஸ் என்று அழைக்கப்படும்.....செல்வந்த்தர்களுக்கு,
தங்களது பலத்தை தெரியப்படுத்த , தக்கவைத்துக்கொள்ள எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. தயவு செய்து தவறான ஆட்களுக்கு மறைமுக
உதவிகள் பண்ணி, ஒரு சமுதாய பின்னடைவிற்க்கு காரணமாகி விடாதீர்கள். சரித்திரம் உங்களை சத்தியமாய் மன்னிக்காது.
உங்கள் தாராள மனதை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தேர்தல் முடியட்டும். உண்மையான வெற்றியாளர்கள் மக்களால் தேர்ந்த்தெடுத்து
அறிவிக்கப்பட்ட உடன், ஒவ்வொரு வார்டில் உள்ள பணக்காரர்கள் ஒருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இணைந்து,
1. ஒவ்வொரு வார்டு உறுப்பினருக்கும், அந்த வார்டில், ஒரு அலுவலகம், ஒரு கணினி, ஒரு அலுவலர் அகியவற்றை
அமைத்துக்கொடுக்கலாம். வருடம் முழுவதற்குமான செலவு என்பது, உங்கள் ஆதரவு பலத்தை நிர்ண்யிக்க செலவழிக்கப்போகும் தொகையை விட
கண்டிப்பாக குறைவாகவே வரும்.
2.இரண்டிற்கும் மேற்பட்டோர் கொண்ட ஆலோசனை மற்றும் கண் காணிப்புக் குழுவை அமைத்து வார்டு உறுபினர்களுக்கும் எல்லாவிதத்திலும்
உதவலாம்.
மேற்கண்ட செயல்கள் மூலம் வார்டிற்கு கிடைக்கும் நன்மைகள்,
1. எந்த நேரத்திலும், மக்கள் தங்கள் தேவைகள நிறைவேற்றிக்கொள்ள உற்ப்பினரை எளிதில் அணுகலாம்.
2. ஆலோசனை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் வார்டு வளர்ச்சிப்பற்றி உடனை நடவடிக்கைகள், செயல்பாடுகள் மக்களை எளிதில்
சென்றடையும்.
3. லஞ்சம், ஊழல் என்ற பேராபத்திலிருந்து முதலில் உறுப்பினரை, பின்னர் மக்களை படிப் படியாக பாது காக்கலாம்.
மேலும்,
1. மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அலுவலக நோட்டீஸ் போர்டில் எழுதப்படவேண்டும்.அதில் மனு பெற்றதேதி அவை நிறைவேற்ற
எடுத்துக்கொள்ளப்படும் கால அளவு, ஆகியவை குறிப்பிடபடவேண்டும்.
2. வார்டின் கல்வி பயிலும் மாணவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.அதில் பண வசதி இல்லாமல் மேற்படிப்பு தொடங்க
முடியாமல் இருக்கும் மாணவர்களின் நிலை அறிந்து, பொது நல இயக்கங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
3.அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தவேண்டும்.
இப்படி மக்களுக்காக, மக்களோடு இணைந்து பணியாற்றும் போது அதன் வெற்றி அள்விட முடியாதது...
நாளைய வரலாறு உங்கள் வாழ்கையை தானாகவே பதிவு செய்து கொள்ளும்.
நகராட்சி தலைவரே!
பெருன்பான்மையான உருப்பினர்களின் ஆதரவோடு, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.
தங்களக்கு வழங்கப்பட்டுள்ளது மலர் கீரிடம் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.
1. நகரின் வளர்ச்சிக்கு தேவையான தொலை நோக்கு திட்டங்களை தயாரித்து அதை நிறைவேற்றக்கூடிய குழுவை அமைத்து, அதனை தொடர்ந்து
கண்காணித்து வரவேண்டும்.
2. நகரின் பின்னோக்கிற்கு முக்கிய காரணம் ஊழல்-அதனை முழு மனதாக எல்லாவழிகளிலும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
3. எல்லா வார்டுகளிலும் மாதம் ஒருமுறையேனும் தாங்கள் நேரிடையாக சென்று பார்வையிட்டு வார்டின் உண்மையான நிலை அறிந்து, அந்த்தந்த
வார்டின் உறுபினர்களுக்கு, தகுந்த அறிவுரை வழங்குதல்.
4. மாநில அரசோடு இணக்கமான உறவை மேற்கொண்டு நகருக்குத் தேவையான, முழுமையான உதவிகளை பெறுதல்.
5. ஏட்டில் உள்ள அன்றாட பணிகளோடு,நகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கி அரசிடம் உதவி பெற எல்லாவிதமான
முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.
6. தங்களுடைய பதவிக்காலத்தில் நம் நகரை மாதிரி நகரமாக மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல். இதற்காக நமதூரில்
நிறைந்து வழியும் கல்வியாளர்களை, சமூக சிந்தனையாளர்களை இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்,
7. வேலை வாய்ப்பில் நமதூருக்கு முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யலாம். அதற்க்கான தகுதிகளை ஏற்படுத்தக்கூடிய முகாம்களை நடத்தலாம்.
8. நீண்ட கால வளர்ச்சித் திட்டமாக, சிறு தொழில், மற்றும் குறுந்தொழில்கள் நமதூரில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். இதற்காக
நமதூரின் செல்வந்தர்களை தொடர்பு கொண்டு, திட்டவடிங்களை தயாரித்து, அவர்களை மனதளவில் தயார் செய்யலாம்.
நகரின் வளர்ச்சிக்கு தங்களோடு துணை நிற்க மக்கள் தயாராக உள்ளார்கள். இம்மைக்கும் மறுமைக்கும் பயன் பெறும் வகையில்
செயல்படுங்கள்.
நல்ல தலமை, நல்ல உறுப்பினர்கள்,நல்ல, திட்டமிட்ட செயல் திட்டங்கள்............கண்டிப்பாக அல்லாஹ்வின் அருள் நம்மை சுற்றி இருக்கும்.
இன்ஷா அல்லாஹ்.
முடிவாக,
ஒரு குடும்பத்தலைவன் நன்றாக இருந்தால் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். ஒருகுடும்பம் நன்றாக இருந்தால் ஒரு ஊர் நன்றாக இருக்கும், ஒரு
ஊர் நன்றாக இருந்தால் நம் மாவட்டம் நன்றாக் இருக்கும். ஒரு மாவட்டம் நன்றாக இருந்தால் நம் நாடே நன்றாக இருக்கும். எனவே மாற்றத்தை
நம்மில் இருந்தே தொடங்கலாமே.
மேற்சொல்லப்பட்ட யாவும் செய்ய முடியாத செயல்கள் அல்ல..... அப்படி நம் மனதிற்க்கு தோன்றினால் நடந்து கொண்டிருக்கும் அநாகா£கத்திற்கு
நம்மை அறியாமல் நாமே பழகி விட்டோம் அல்லது ஒத்து போய் விட்டோம் என்பதுதான்.
இது வெறும் கனவு அல்ல..........இன்ஷா அல்லாஹ் நடக்கும்...... அதன் பின்னர்,
ஒவ்வொரு தெருவிலும் உறுப்பினர்களுக்கு அலுவலகம், அதில் தகவல்கள் நிரம்பி வழியும்.....
பணத்தால் கல்வியின்மை என்ற நிலை காணாமல் போய்விடும்.
நகர் மக்களின் தேவைகள் வீடு தேடி வந்து தீர்த்து வைக்கப்படும்.
சுகாதாரம் சொந்தமாகும். ஊழல் ஒழிந்து போகும்.
இளைய தலைமுறையினர் நாட்டின் தேசத்தின் முக்கிய சக்திகளாய் மாறுவார்கள்.
நம் நகர் இந்தியாவிலேயே மாதிரி நகராய் உருவாகும்.
இனி
இது தான் என் ஊர் என்று உலகம் முழுக்க உரக்கச்சொல்வோம்.
|