Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:50:03 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 50
#KOTWART0150
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 30, 2013
யோகா மற்றும் யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்!
இந்த பக்கம் 2086 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கட்டுரையாளர்: எ.எஃப். லாரா அபிஷேக்

---------------------------------------------

யோகா பற்றி இன்று தொலைக்காட்சி, பத்திரிக்கை, விளம்பரங்கள் மற்றும் புத்தகங்கள் வழியே பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நிறைய பேர் அது பற்றி பேசுவதும், விளக்கம் அளிப்பதும் நடக்கிறது. ஆனால் அவை முழுமையானவையா என்றால் “இல்லை” என்று தான் சொல்வேன்.

அரை-குறையாகத் தெரிந்ததை புரிந்ததை வைத்துக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள்பாட்டில் பேசுகிறார்கள், யோகக் கலையை அணுகுகிறார்கள். மக்களுக்குக் குழப்பங்கள் அதிகமாகின்றன. அதனால் எங்கு போவது, யார் சரியான யோகா ஆசிரியர் என்று தெரியாமல் இருக்கிறார்கள். காரணம் ஒரே பெயரில் இத்தனை குழப்பஙகள் நடக்கின்றன. நம் உடல், மூச்சு மற்றும் மனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்யக்கூடிய ஆசனம், பிராணாயாமம், தியானம்… போன்றவற்றை யோகிகள், நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். நாம் இதை அறியவில்லை, அருமையை சரியாய் உணரவில்லை.

யோகா வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி அவர்கள்; மதிக்கத் தொடங்கிய பின்பு தான் நாம் கவனிக்கத் தொடங்கினோம். பலரும் இந்தியாவில் யோகாவை முறையாகப் பயிலத் தொடங்கினர்.

நாம் வெறும்வாயில் யோகம் பற்றி கதைப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிநாட்டினர் ஆராய்ச்சி மூலம் யோகாவை நன்கு அறிந்து, மதிப்பீடு செய்து, அதன் சக்தியை உணர்ந்தனர். அதன் உபயோகம் எத்தகையது என்பதை புரிந்து கொண்டார்கள். அதனால் தற்போது அங்கு லட்சக்கணக்கானவர்கள் யோகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறு சிறு நகரங்களில் கூட பல யோகா ஆசிரியர்கள் இருப்பதை நான் ஆஸ்திரேலியாவில் கண்டேன். தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை யோகா மேலும் அறிந்து கொள்வதற்கு ஒதுக்குவதை பார்த்தேன். அவ்வளவு முக்கியத்துவம் தந்து கற்றுக் கொள்கிறார்கள். எதையும் மிகச் சரியாய்த் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

நம்மிடம் யோகா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை. யோகம் சரியாக வழியில் பரவலாக போய்ச் சேரவில்லை. காரணம் இதை மதம் சார்ந்து பார்ப்பதும் ஒரு காரணம். உடல், மனம், பற்றிய விழிப்புணர்வு இல்லை. உடலுக்கு ஏதாவது வந்தால் தான் அது பற்றி யோசிக்கிறார்கள் பெரும்பாலோர். ஆனால் உடல், மனம், ஆரோக்கியத்திற்கு மதம் தேவையில்லை. அதேபோல் யோகாவிற்கும் அவை தேவையில்லை. நம் எல்லோருக்காகவும் தான் நம் யோகிகள் இ சித்தர்கள் பாடுபட்டு யோசித்து யோக முறையை உருவாக்கி உள்ளனர்.

ஆசனங்களை உருவாக்கியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ- மதத்திற்கோ அல்ல. யோகப் பயிற்சியில் மதம் பற்றி பேசுவதில்லை உள்ள பிரச்சினைகள் பற்றியும் உடல் பற்றியும் தான் பேசுகிறோம்.

யோகா என்பது ஆசனங்கள் மட்டும் கொண்டதல்ல. யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம், மற்றும் சமாதி ஆகிய எட்டு அங்கங்க்ள கொண்டதாக கூறுகிறார் பதஞ்சலி முனிவர்.

பொதுவான யோகா என்றால் நோய்- நொடி இல்லாதவர்கள் தனித்தோ, குழுவாகவோ செய்வதாகும். இதில் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கும். உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் தினசரி வாழ்க்கையில் நன்றாக வேலைகள் செய்யவும் இந்த பொது யோகா அமையும். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சியை அறிமுகப்படுத்தவும் முடியும் செய்யாத ஆசனங்களை புதிது புதிதாக செய்யவும் இடமுண்டு.

இதனால் தினமும் நாம் செய்கின்ற வேலையில் முழு ஈடுபாட்டுடன் செய்ய நம்மை தயார் செய்கிறது யோகாப் பயிற்சி.

யோக சிகிச்சை என்பது யோகத்திலிருந்து வந்தது தான். ஆனால் இதன் அணுகுமுறை வேறு. இதில் ஒருவருடைய உடல், உடல் அமைப்பு, நோய் செய்யும் வேலை, குடும்ப நோய் வரலாறு, அவருடைய தேவை, அவருடைய யோகா செய்யக்கூடிய சக்தி, செய்யும் நேரம்…. போன்றவற்றை அறிந்து தனிப்பட்ட முறையில் தரும் பயிற்சியாகும்.

உதாரணத்திற்கு ஓற்றைத் தலைவலியுடன் ஒருவர் வந்தால், அதன் வேர்க்காரணங்களை அறிவோம். கழுத்து, தோள்பட்டையில் இறுக்கம் ஏற்பட்டுள்ளதா என்று பார்ப்போம். அவ்வாறு இருந்தால் அந்த இறுக்கத்தை சிறு சிறு அசைவுகள் மூலம் (மூச்சுடன்) தளர்த்தி சரி செய்வோம். நாள்பட்ட பல பிரச்சனைகளைக் கூட யோக சிகிச்சையில் வியக்கத்தக்க அளவில் சரியாகிறது. பல அறுவை சிகிச்சைகளை தவிர்த்து யோகா மூலம் சரி செய்து வருகிறோம்.

முதுகுவலி, சைனஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பெண்களுக்கான உபாதைகள் உள்ளவர்கள் யோக சிகிச்சைக்கு வருகிறார்கள். ஒரே நோய் பிரச்சனை உள்ள இருவர் வந்தாலும் பயிற்சி வேறு வேறாகத்தான் இருக்கும். காரணம் ஒவ்வொருவரின் தனித்தன்மை, உடல் அமைப்பு - இயல்பு – வயது – பிற அம்சங்கள் ….என்று பல வேறானவை.

யோக சிகிச்சையை சில நேரம் மருந்து உதவியுடன் சரி செய்கிறோம். நாளiடைவில் மருந்தின் அளவைக் குறைத்து பின்பு மருந்தை முழுதாக நிறுத்தும் நிலைக்கு கொண்டு வருகிறோம். சிலருக்கு மருந்தே இல்லாமலும் யோக முறையில் மட்டுமே முழுதாய் சரி செய்கிறோம். யோக சிகிச்சைக்கு முதலில் தேவை, நம்பிக்கையாகும். இரண்டாவது பயிற்சிக்கு எடுக்கும் முயற்சி. யோகத்தில் ஈடுபடுவோர் தாங்கள் எடுக்கும் முயற்சி – பயிற்சி முக்கியம்.

கீழ் முதுகுவலி (Low Back Pain) என்றும் இரண்டு இலட்சம் அறுவை சிகிச்சைக்கு ஆகும் என்றும் சொல்வார்கள்;. நாங்கள் பதினைந்து, இருபது நாட்களில் சரி செய்து விடுவதும் உண்டு. அதிலும் பெரும்பாலும் அவர்களாகவே வீட்டிலிருந்து செய்வது அதிகமாக இருக்கும். அவ்வளவும் மிக எளிய பயிற்சியாகும். நம்பிக்கையுடன் பயிற்சியை சரியாகச் செய்தவர்கள் நல்ல பலன் கண்டிருக்கிறார்கள். நம்பிக்கையற்ற பலர், நம் முன்னோர்களை கேள்வி கேட்கிறார்கள். ஆனால் பரவலாக இருக்கின்ற நவீன மருத்துவர்களை இவர்கள் கேள்வி கேட்பதில்லை.

யோகப் பயிற்சிகள் மூலம் எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை வராமல் தடுக்கலாம். இருக்கிற நோயின் வீரியத்தைக் குறைக்கலாம். சில நோய்களை முழுமையாக தீர்க்க முடியும். இதை சரியான யோக ஆசிரியர்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம்.

யோக உலகம் பல அடுக்குகளை (Layers)க் கொண்டது. அதில் உங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்யும். திறந்த மனதோடு அணுகுங்கள். உங்களுக்கு புதிய வாழ்வு கூட சாத்தியப்படலாம். இன்று பல மருத்துவர்கள் யோகாவை தங்கள் சிகிச்சையின் அங்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் யோகா நுழைந்துள்ளது. இது நல்ல – வரவேற்கத்தக்க அம்சம் தான்.

மேலதிக விபரங்களுக்கு:

REGISTERED OFFICE ADDRESS

(off Elliots Beach Road, Behind Barista Coffee)

No.7, 25th Cross Street,
Besant Nagar,
Chennai - 600 090.
Tamil Nadu, India.

Phone : +91 44 2446 4141
E-mail : info@vhfyogacare.org / mailvhfyoga@gmail.com

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ்
posted by: ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) on 30 October 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31077

எனக்கு இந்த யோகாவினால் ஆரோக்கியத்தில் மாற்றம் மிகவும் கண்டுள்ளேன். அதன் விளைவாக யோகா பயிற்ச்சி கூடம் ஒன்று நமதூரில் துவங்கலாம் என்பது என்னுடைய நெடு நாட்களாய் உள்ள ஒரு ஆசை. இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் நம்ம ஊரில் யோகா பயிர்ச்சிக்கான ஒரு நிலையம் எதிர்பார்க்கலாம்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: S.M.I.Zakariya (chen) on 31 October 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31095

யோகா நல்ல விஷயம் தான் மறுக்கவில்லை நடைப்பயிற்சியும் நல்ல விஷயம் தான் மறுக்க வில்லை. ஆனால் ஜிம் க்கு செல்வதை மட்டும் கெட்ட தாக யார் ஆக்கினார்களோ தெரியவில்லை.ஏனென்றால் இளைஞர்களை இழுக்கும் சக்தி ஜிம் இல் தான் இருக்கிறது ஆனால் தவறான கண்ணோட்டத்தில் பரவலாக பார்க்கபடுவதால் யாரும் இங்கு செல்வதற்கு யோசிக்கிறார்கள்.

முறையான warm up செய்து விட்டு ஜிம் பயிற்சியில் ஈடுபடும்போது உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் உடல் வலிமை பெரும் .இப்ப எல்லாம் நம்ம ஆளுங்களுக்கு ஒரு சாதாரண பெட்டியை தூக்க கூட பளு இல்லை.இந்த நிலை மாறும். உடலுக்கு அழகான தோற்றத்தையும் கொடுக்கும்.

நமது ஊரில் கூட ஒரு நல்ல ஜிம் உருவாக்கலாம். இங்கு சென்னையில் பல corporation ஜிம் கள் கவுன்சிலர்கள் மற்றும் mla கள் அரசாங்க உதவியுடன் உருவாக்க பட்டு நல்ல விதமாக இயங்கி வருகின்றன. தனியாரால் நடத்தப்படும் ஜிம் இல் உள்ள எல்லாவசதிகளும் இதில் இல்லைஎன்றாலும் அந்த அளவுக்கு மோசம் இல்லை. நம்ம ஊர் தலைவியும் கூட முயற்சி எடுத்து இதை கொண்டு வரலாம் . தற்போது ஆளுங்கட்சி இல் வேறு தன்னை இணைத்து கொண்டு விட்டார்கள் அல்லவா. ஆகையால் நல்லது நடக்கும் என்று எதிர் பார்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. ஜிம் - மக்களின் மனோநிலை மாறாதவரை..
posted by: Salai.Mohamed Mohideen (Bangalore) on 02 November 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31144

சகோதரர் ஜக்கரியா அவர்கள் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு வருபவர் என்று நினைக்கின்றேன். நல்லதொரு தகவல் பரிமாற்றம்.

ஏற்கனவே நம் ஊரில் பல ஜிம்-கள் (பெண்களுக்கு கூட) தோன்றி விட்டில் பூச்சிகள் கதைதான். ஒரு சிலர் வாக்கிங் செல்வதற்கு கூட தயாராக இருக்கின்றார்கள்... ஆனால் ஜிம் என்றால் அலர்ஜி! அம்மனோநிலை மாறாதவரை 'ஜிம்' விரலுக்கு இறைத்த நீர்தான்!!

ஜிம் - யோகாவும் சமமாகது என்று நினைக்கின்றேன். Physical fitness /Body பில்டிங் -க்கு ஜிம். ஆனால் யோகா Physical fitness + நோய் தீர்க்கும் முறைகளையும் கொண்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: netcom buhari (chennai) on 06 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31243

ரெண்டையும் சேர்த்து (யோக & ஜிம்) ஊரில் ஆரம்பித்தல் மக்களுக்கு ரொன்பா உதவியாக இருக்கும், எண்டு நினைகின்றேன், ஷிபா முன் நிண்டு நடத்தினால் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: netcom buhari (chennai) on 07 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31275

சாலை மொஹிதீன் சொல்வது போண்டு, நண்பன் 'ஜகரிய தம்பி", ஜிம் கு செல்பவர்தான், அதை விட முக்கியம் மூலிகையை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளும் பழகமும் கொண்டவர். ஒரு முறை அவரை பார்க்க நண்பர் ஒருவர் அவர் இல்லம் சென்டுள்ளார். அவர் அவருக்கு குடிக்க "அருகம் புல் ஜூஸ்" கொடுத்துள்ளார். அவர் அதை குடிக்காமல் "புலி பசித்தாலும் புல்லை திங்காது" எண்டு பல மொழியை சொல்லி உள்ளார்

எனவே அவர் வீட்டுக்கு போனால் மூலிகை ஜூஸ் கொடுக்கும் நல்ல பழக்கம் கொண்டவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved