அன்பு இணையதள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த தலைப்பைப் படிக்கும்போதே இதில் நீங்கள் நினைப்பது இருக்க வேண்டும் என்று உங்கள் மனம் சொல்லலாம். இதுதான் உண்மை. பிறர் மனநிலையைத் தெரிந்துகொண்டு எழுதும் எழுத்தாளன் கிடைப்பது அரிது. மனோதத்துவ இயல் படித்தவர்களுக்கு மட்டும்தான் பிறரைப் பார்த்தும் முகபாவனை அறிந்து கை நாடி பார்க்காமல் நோயைச் சொல்லி விடுவார்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் தைரியம் ஹாஸ்பிட்டல் இருந்ததாகச் சொல்வார்கள். இன்றும் இருக்கலாம். நான் சென்னையில் 55 வருடங்கள் வாழ்ந்து, 2007இல் ஊர் வந்ததும், சீதக்காதி நினைவு நூலகத்தில் நூலகராக, அதன் அமைப்புக்குத் தலைவராக, அங்கு இயங்கும் மஜ்லிஸுல் கவ்து சங்க தலைவராக இரண்டு முறை - கூட்டம் நடக்கும்போது போகாமலே (போட்டியின்றி) தேர்வு செய்யப்பட்டேன். 2003 முதல் மூடிக் கிடந்த இந்த அமைப்பைத் திறந்து செயலாற்றியவர் 2006இல் நூலக பொருளாளராகி செயல்பட்டார் என்பதை ஊர் வந்ததும் அறிந்துகொண்டேன்.
இந்த நூலகம், சங்கம் யாரால் எப்படி எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று இவர்களுக்குத் தெரியாது என்றும் கூறினார்கள். மறைந்த எஸ்.டி.முத்துவாப்பா ஸாஹிபு அவர்கள், மர்ஹூம் மேனா தானா, மர்ஹூம் ஸாஹிபு காக்கா இன்று மூஸா ஹாஜி வீடு கட்டி இருக்கும் நிலத்தின் அன்றைய சொந்தக்காரர், அன்று எல்.சி.எம். என்ற அப்துல் காதிர் மர்ஹூம் (கே.டி.எம். தெரு அப்துல் காதர் மாமா) மேனா தானா கொடை வள்ளல் அவர்களின் கூட்டாளி மற்றும் மானா கூனா என்ற மக்தூம் முஹம்மது அலியார் தெரு இவர்களின் கூட்டில் உருவானது 1942இல் மஜ்லிஸுல் கவ்து சங்கம். அதில் தாயிம் பேட்மிண்டன் க்ளப் (இன்றைய தாயிம்பள்ளி வணிக வளாகம் டானா அமைப்பில் தனியாக சின்ன நெசவுத் தெரு ஆரம்பத்தில் பலசரக்கு மளிகை பாண்டி கடை முதல் பிஸ்மி கடை வளாகம் உள்ள உட்பகுதியில் பேட் விளையாட மைதானம் இருந்தது. ஆண்டுதோறும் டோர்னமெண்ட் வைத்து, அரசியல் தலைவர் அண்ணாதுரை, தி.க. தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் போன்றோர்களையெல்லாம் அன்றைய நமது தெரு வாலிபர்களான - இன்று மறைந்து போன ஏற்கனவே சொன்னவர்கள் நடத்தி, தெருவுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்திருப்பார்கள். தெரியாமலும் பலர் இருக்கிறார்கள்.
எஸ்.டி.முத்துவாப்பா காக்கா, மானா கூனா மக்தூம் மீரா சாஹிப் (மானா கூனா சதக் காக்கா அவர்களின் அண்ணன்தான் இவர்கள்) பண உதவி மேனா தானா இவர்களுடன் நானும், மாஸ்டர் சாகுல் ஹமீது, காதர் அலி (மரைக்காயர் பள்ளித் தெரு), மறைந்த சாகுல் ஹமீது (ஆரிபா ஆலிமா அவர்களின் வாப்பா), கொச்சியார் தெரு செய்யத் இப்றாஹீம் - இன்னும் ஐந்து பேர் மொத்தம் பத்து பேர் சேர்ந்து அன்று (1974இல்) ஆரம்பித்ததுதான் சீதக்காதி நினைவு நூலக வரலாறு என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும்.
வாலிபால் விளையாட்டுக்கு மட்டுமே பள்ளி அனுமதி வழங்கியது. அன்று. பெரிய காசிம் என்று சொல்லப்படும் மவ்லானா காக்கா மகன் காசிம் (எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ்) அவர்கள் மச்சான் இபுறாஹீம் சின்ன காசிம், ஜமான் (சிங்கப்பூர்) - அவங்க வயது குரூப் நமது மைதானத்தில் வாலிபால் விளையாட்டைப் பள்ளி அனுமதி பெற்று காலை மாலை விளையாடி வந்தனர். இதற்கான பல செலவுகளை பந்து பக்கத்தில் விழுந்து விடாமல் கிடுகு தட்டிகளை வைக்க அன்று உதவியவர்களில் எல்.டி.எஸ். சித்தீக் அடிக்கடி செலவு செய்து வந்ததும் தெரிய வந்தது. மஃரிபு பாங்கு சொன்னதும் ஊரில் எல்லா இடங்களிலும் விளையாட்டு நிறுத்தப்படும்.
வெள்ளைக்காரனை துரத்தி விட எத்தனை போராட்டம் நடந்தது...? உயிர்ப்பலி எடுத்தான் வெள்ளைக்காரன். அவன் கொண்டு வந்த மனிதர்களை காயப்படுத்தும் அல்லது வீதியில் செல்லும் ஆட்டோ, பஸ் மீது வேகமாக விழுந்து வம்பு இழுக்கும் விளையாட்டை (வெள்ளைக்காரன் நமக்கு பரிசாகத் தந்தானா அல்லது நாம்தான் தெரியாமல் எடுத்துக்கொண்டோமா என்ற ஆய்வு இங்கு தேவையில்லை.) அவன் தந்த சண்டை பிடிக்க வைக்கும் கை காலில் அடிபடும் பலருககு நெற்றியில் காயம் ஏற்படுத்திய கிரிக்கெட் விளையாட சின்ன எலிப்பொறி கிரவுண்ட் சரிபடுமா என்பதை படிப்போம். மனதில் போட்டு ஆய்வு செய்துகொள்ளட்டும். ஊருக்குள் கிரிக்கெட் விளையாட எந்த முஹல்லா பள்ளியும் அனுமதி வழங்கியது கிடையாது. பெரிய கிரவுண்ட் உள்ள சில இடங்கள் அனுமதித்து இருக்கிறது. அவ்வளவு பெரிய இடவசதி அவர்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளட்டும்.
விளையாட்டின் பெயரால் சண்டை தேவையா? வெள்ளைக்காரனை துரத்தியதால் அவன் நம் மீது கொண்ட கோபத்தின் நிலையா அல்லது அவன் சூழ்ச்சியில் கெட்டிக்காரன் என்பார்கள். அப்படி நம்ம மாணவர்களை சண்டை பிடிக்க வைக்கும் ஆயுதமாக கிரிக்கெட்டை / அவனைத் துரத்திய அனைத்து நாடுகளுக்கும் தந்துவிட்டு போய்விட்டானா என் பலர் கேட்கிறார்கள்.
ஒரு பள்ளிவாசல் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிய ஆர்வம் காரணமாக சுவர் ஏறி விழுந்து வரும் மாணவர்களைத் தடுக்க முடியாததால் விளையாட்டுத் திடலைச் சுற்றிலும் உள்ள சுவரை பெரிதாக எழுப்பியதால், ஒரு பள்ளிக்கு செலவு வந்தது யாரால் என்பதை எண்ணிப் பார்க்கட்டும். அப்போதுதான் நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என உணர முடியும்.
நாம் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டதால் நமக்குப் புது தெம்பு உற்சாகம் வருவதால் கூட புதிதாக சொல் கேட்க மாட்டோம் என்ற மன நிலையும் வந்து விடக்கூடாது. நமதூர் கல்லூரி மாணவர்களில் பலர் எதைச் சொன்னாலும் யோசிப்பவர்கள் கேட்டுக் கட்டுப்படும் மனநிலை உள்ள பிள்ளைகள் என்பதை நான் அறிந்துள்ளேன். சில மாணவர்களை சிலர் கையில் போட்டு அவர்களைத் திசை திருப்பி இவன் சொல் கேட்காதே என்று சாவி கொடுப்போர் பட்டியல் பலருக்கும் தெரியும். இந்த மாணவனைப் பார்த்து தேர்ந்தெடுத்து அவனைப் பகடைக்காயாக வைத்து காய்களை நகர்த்தும் சிலர் சில இடங்களில் இருப்பதால்தான் சில கல்லூரி மாணவர்கள் தெரியாமல் அறியாமல் பல அமைப்பு நடத்துபவர்களிடம் மோத வருகிறதற்கு (அந்தக் கல்லூரி மாணவன் நேரடி காரணம் அல்ல) அவனுக்கு சாவி கொடுக்கும் ஒரு ஜீவன் இருப்பதை எல்லோரும் அவங்க பகுதியில் அறியாமல் இல்லை. அப்படி சாவி கொடுப்பவர் தானாகவே திருந்த விட்டு வைத்துள்ளது என்பதே உண்மை.
இன்றைய காலத்தில் அப்படித்தான் மாறி இருக்கிறது. சின்ன பிள்ளை என புத்தி சொல்ல முடியாது. நான் சதா புத்தி சொல்லிக்கொண்டே இருக்க மாட்டேன். நகைச்சுவையாக புத்தி புகட்டி விலகி விடுவேன். யார் எது சொன்னாலும் நான் கேட்பேன். படித்தவர்களை விட அனுபவசாலிகளான பெரியவர்களிடம் நிறைய நான் தகவல்களை சேகரித்து பயன்படுத்தி, சிறப்பு பெற்றுள்ளேன். என்னைப் பற்றி யார் எது சொன்னாலும் மறைமுகமாக நான் இல்லாதபோது சொல்பவர்களிடம் போய் சண்டையிட மாட்டேன். என்னைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுப்பேன். இப்படி செய்வதால்தான் நான் இன்று பலரால் கவரப்படுவதற்குக் காரணமாகி வளர்ந்து வருகிறேன்.
இக்ராஃ தர்வேஷ், கே.எம்.டி. கனி பாய், கொப்பரா நவாஸ் பாய், பேஷன் பர்தா சாதிக் பாய், மூஸா ஹாஜி, அவர்குளின் தம்பி முஹம்மது சாலிஹ், தம்பி எஸ்.கே.ஸாலிஹ், மிஸ்டர் ஹமீது துரை, சதுக்கைத் தெரு ஏஒன் சூப்பர் மார்க்கெட் ஜமால் காக்கா, டீ.ஏ.எஸ்.அபூபக்கர் ஹாஜி, கலாமி காக்கா, கோமான் தெரு சைக்கிள் கடை பாரூக் காக்கா, மாஸ்டர் கம்ப்யூட்டர் மாலிக் மற்றும் அலி பாய் இன்னும் நான் கற்ற பெரியவர்கள் - சிறியவர்கள் பட்டியல் தொடரும்.
இன்ஷாஅல்லாஹ் ஊரில் எல்லா சங்கங்கள் பற்றியும் எழுதவுள்ளேன். கட்டுரைச் செடி வளரும். |