Re:... posted bypirabu n s sulthan jamaludeen (dubai)[30 December 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32230
அஸ்ஸலாமு அலைக்கும்
சதக்காகா அவர்களே நீங்கள் மஹழறா பகுதியில் இருந்து உள்ளேநுழையும் பகுதிதான் முஹம்மது கல்ஜி (ரஹ்மத்துல்லாஹ் அலைஹி )அவர்களால் கெட்டபட்டபகுதி ஆகும். அந்த பள்ளியும் செய்யது சுல்தான் ஜமாலுதீன் ( ரஹ்மத்துல்லாஹ் அலைஹி ) அவர்கள் கெட்டிய பள்ளியும் தனி தனியாகவே உள்ளது. அதை நன்றாக கவனித்தால் தெரியும். இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் 500 வருடங்கல் ஆகும்.
தாங்கள் சொல்லுவதுபோன்று கட்டிடத்திலுள்ள வேலைபாடுகளையும், அதன் அமைப்புகளையும் வைத்தே அதன் காலம் கணிக்கபடுகிறது. சில தேசதுரோஹிகளின் பொய்யான பிரசாரத்திற்குபயந்தும் காலசூல்நிலைகளை கருதியும் நம் பெரியவர்கள் அந்த வேலைபாடுகளை அழித்துவிட்டார்கள்.
ஜும்ஆ பெரியபள்ளியும்,அதனருஹில் இருக்கும் முத்தமிழ் சங்கமும், இரட்டைகுளத்து பள்ளியும் அதைசுற்றிகிடைக்கும் பொருள்களும்.மேலும் நம்மூரில் பரவலாக கிடைக்கும் பொக்கிஷங்களும்.நம் முன்னோர்கள் யாத்துவைய்த்த காவியங்களும்.நாம் இந்த மண்ணின்மைந்தர்கள் என்பதையும். இந்த மண்ணுக்கும் அரபஹத்துக்கும் காலம்காலமாக இருந்துவரும் உறவினையும் என்றென்றும் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.
Re:... posted bypirabu n s sulthan jamaludeen (dubai)[29 December 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32217
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் நம்மூரில் ஆய்வுசெய்யும்போது எனக்கும் அவர்களுடன் சென்று பல விஷயங்களை அறியமுடிந்தது.அவர்கள் எழுதிஎடுத்த கல்வெட்டுதகவல்களை நான் நகலெடுத்துவைத்துளேன்.அதில்கூட பலகல்வெட்டுகள் இன்றில்லை என்பதே வருத்தப்படவேண்டிய விஷயம்.காரணம் நம்மிடம்போதிய விழிப்புணர்வும்,ஆர்வமும் இல்லாததே.
இன்றுவரை பல அரபிகல்வெடுகள் வாசிக்கபடாமலே உள்ளது.அதுபோன்று நம்மூரில்இதுவரை அகழாய்வு செய்யப்படவில்லை.அகழாய்வுசெய்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுற்பட்ட பலபொருள்கள் கிடைக்கும்.இதுவரை 800 ஆண்டுகளுக்குமுற்பட்ட நாணயங்களும் ஆயிரம் ஆண்டுகளுக்குமுற்பட்ட மண்ணாலான சட்டிபானைகளும், மண்ணாலான கிணற்றுரைகளும் கிடைதிருகின்றன. அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும்பல நுற்றாண்டுக்குமுற்பட்ட பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்திற்கு அப்பால் பலவரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் நம்மூரின் தொன்மையை நாம் அறியமுடிகிறது.குறிப்பாக மலையாளநூலான ‘ துஹ்பதுல் முஜாஹிதீன் ‘ என்ற கிதாபில் சஹாபி மாலிக் இப்னு தீனார் ( ரலியல்லாஹுதஆலஅன்ஹு )அவர்கள் காயல்பதியில் ஒருபள்ளியை கெட்டியதாஹவும் காயல்பதிக்கு தன்பிரதிநிதியாக காசிம் என்பவரை நியமித்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன.
கி பி 842ல் முஹம்மதுகல்ஜி ( ரஹ்மத்துல்லாஹ் அலைஹி) அவர்களால் கெட்டபட்ட ஜும்ஆபெரியபள்ளி இஸ்லாம் அமைதியான வழியில் தென்னிந்தியாவில் 1000 வருடம்களுக்கு முன்பெபரவி இருந்தது என்பதை பறைசாற்றுகிறது. நாமும் நம் சந்ததிகளும் நம்மையும் நம்மூரின் தொன்மையையும் அறியவேண்டுமென்றால் இருக்கின்ற கல்வெட்டுகளையும் பழைய பள்ளிவாசல்களையும் முறையே பராமரித்தாலே போதும்.இல்லையென்றால் நம்மையும் நாளை நாடோடிகளாகவே சித்தரிப்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross