Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர... posted byMohamed Cnash (Makkah. )[09 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10003
ஏன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள்!! ஆபிதா தகுதி வாய்ந்த வேட்பாளராக தெரிவதால் மக்கள் ஆதரிக்கிறார்கள்!! நீங்கள் எல்லாம் சொல்லுவது போல நம் வீட்டுக்கு வீடு படித்தவர்கள் நிரம்பி இருகிறார்கள்..அவர்கள் சிந்தித்து முடிவு எடுத்து தகுதியின் அடிப்படையில் ஆதரிப்பார்கள் ஐக்கிய பேரவை கை காட்டுபவரை ஆதரிக்க மக்கள் ஒன்றும் அறியாத பாமரர்கள் இல்லை. உங்களுக்கு அந்த ஐக்கிய பேரவை சொல்லும் வேட்பாளர் வரணும் ...இப்போது உங்கள் கனவு கானல் நீராக போகிறது அதற்க்கு இப்படி வரிந்து கட்டி கொண்டு வருகிறீர்கள்!! முதலில் போலி ஒற்றுமை என்ற கோசத்தை வைத்து பார்த்தீர்கள்!! அப்புறம் கட்டுப்படவில்லை மட்டுப்படவில்லை என்று கதறிபார்த்தீர்கள்!! அறிக்கை மேல் மேல் அறிக்கை விட்டீர்கள்!! எதிலும் உங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை மாறாக ஆபிதா அவர்களுக்கு மக்கள் ஆதரவுதான் பெருகியது!! கடைசியாக ரூத்தம்மா கருத்தம்மா என்று என்னலாமோ சொல்லி பயம் காட்டுநீர்கள்!! எப்போது ஊரு கலாச்சாரம் ஷரியத்......தயவு செஞ்சி உங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள்!!
இந்த கலாசாரம் ஷரியத் பற்றி எல்லாம் ...சில வருடம் முன் கருணாநிதி வோட்டு கேட்டு வரும் பொது LF ரோட்டில் மிக பிரமாண்ட ஒரு பொது கூட்டம் நடத்தி சுற்று வட்டார மாற்றுமதகாரர்கள் எல்லாம் வந்து இருக்கும் போது அங்கே நம் பெண்களுக்கு தனி இடம் அமைத்து ஒட்டு கேட்டீர்களே அப்போ எங்கே போச்சி உங்க கலாச்சாரம்!! கலைஞரை பார்க்க வந்தா ஷரியத் தேவை இல்லையா?
சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய இலக்கிய மாநாடு என்று ஒன்று USC இல் வைத்து நடந்ததே அப்போது அங்கேயும் ஊரு பெண்கள் அழைக்க பட்டர்களே !! அந்த கலாசாரம் என்ன..
முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் உங்களில் யாருமே பெண்களை மேடைக்கு அழைக்கவில்லையா அப்படி ஒரு கூட்டமே நம் ஊரில் நடக்க வில்லையா !!
இது போல பல மார்க்க இயக்கங்கள் பெண்களை அழைத்து கூட்டம் போட்டு இருக்கிறார்கள்!! மருத்துவம் கல்வி சமூக நலம் என்று எத்தனையோ கூட்டங்கள் நடந்தும் நடத்தப்பட்டு கொண்டும் இருக்கிறது அங்கே எல்லாம் எந்த ஷரியதுக்கும் கலாசாரத்துக்கும் எந்த கெடும் வர வில்லை ... இப்போ மட்டும் ஏன் கத்துகிறீர்கள்!!
உங்கள் நோக்கம் ஷரியாவோ கலாச்சாரமோ இல்லை!! சஹோ. ஆபிதா எப்படியும் வந்து விட கூடாது அதற்காக ஒற்றுமை கட்டுப்பாடு கலாசாரம், ஷரியத் ..இன்னும் என்ன என்ன கோஷங்கள் எல்லாம் போட போறீர்கள் என்று பொருத்து இருந்து பார்ப்போம்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross