மர்ஹூம் சி. லெ.அப்பா அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாகவும் ஆமீன்! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[15 October 2011] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 10771
எங்கள் பாசத்துக்குரிய அப்பா சி.லெ.சாகுல் ஹமீது அவர்களின் மறு உலக வாழ்வு அடைந்ததை அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம். ஒட்டு மொத்த குடும்பத்தின் தூணாக திகழ்ந்த அப்பா அவர்களின் வபாத்து , நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை உண்டாக்கி விட்டது .
நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலம் முதல் இன்று வரை சொந்த பேரப் பிள்ளைகளாகவே அவர்களின் இதயத்தில் இடம் பெற்று அவர்களின் து ஆவை பெற்று வந்திருக்கிறோம் . அன்று நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் , காட்டு மொஹுதூம் பள்ளியில் பொது சேவை ஆற்றிய எங்கள் ஹாஜர் முத்து கண்ணுஉம்மா அவர்களின் நெருங்கிய உறவாக விளங்கிய நூர் ஆயிஷா கண் உம்மா அவர்களின் காலத்துக்குப் பிறகும் அதே பாசத்தோடும் உறவோடும் அன்பு காட்டி வந்த அப்பா அவர்கள் கடைசியாக, சதுக்கை தெரு வாவு சுலைமான் ஹாஜியார் வீட்டுக்கு முன்பாக நின்று , உச்சி முகர்ந்து முத்தம் தந்து து ஆ செய்தது அவர்களின் இறுதி பயணத்துக்கு மறைமுகமாக காட்டிய செய்கையோ என்று இன்று நினைத்து என் கண்கள் பனிக் கின்றது ....
கொடை வள்ளல் லெப்பை அப்பா குடும்பத்தில் உதித்த அதே குணம் கொண்ட பெருமகனார் ஆற்றிய சேவைகள் ...அனைத்தும் எங்கள் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியே ...அவர்களின் அடிச்சுவட்டை பின் பற்றி ...அவர்களின் சேவை குணங்களை நாங்கள் பெற வல்ல ரஹ்மான் அருள் புரிவானாகவும்!
அப்பா மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரம் அடைந்திருக்கும் அவர்களின் அருமை குடும்பத்தை சார்ந்த எங்கள் பாசத்துக்குரிய அனைத்து சொந்தங்களுக்கும் எங்கள் அனைவரின் ஆழ்ந்த அனுதாபத்தை மிகவும் வேதனையோடு தெரிவிப்பதோடு , எங்கள் அனைவரின் சலாத்தினையும் (அஸ்ஸலாமு அலைக்கும்) தெரிவித்துக் கொள்கிறோம் . வல்ல ரஹ்மான் , அவனின் கிருபையால் துயருற்ற கல்புகளுக்கு சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொடுப்பானாகவும் ! குடும்பத்தார் அனைவரையும் சப்ர் செய்துக்கொள்ளுமாறு மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அப்பா மர்ஹூம் அவர்களின் கப்ரை சுவனத்து பூங்காவாக்கி கொடுத்து , பிரகாசமாக்கி வைத்து ...மறுமையில் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்களாக...ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலா எனும் மேலான சுவன பதி அடைய , கண்ணீர் மல்க வல்ல ரஹ்மானை வேண்டுகிறோம் ...ஆமீன் !
பாசம் மாறாத ஹாஜர் முத்துக் கண் உம்மா குடும்பத்தினர் ,
(K .V A.T.குடும்பத்தினர் )
காயல்பட்டினம் மற்றும் கத்தார்.
kvat.habib@gmail.com
00974 55657147
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross