மக்கள் வேட்பாளர் posted byAbdul Razzaq Lukman (Dubai)[21 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11473
அஸ்ஸலாமு அழைக்கும்.
வெற்றி பெற்ற நமதூர் தலைவி சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் அல்லாஹுக்கு பயந்து நல்லாட்சி தர துஆ செய்கிறேன்.
நானும் தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஆதரவான நிலையில் comments எழுதவில்லை. ஆனால் மக்கள் மிக தெளிவாக வாக்களித்து இருக்கிறார்கள். 50% சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளீர்கள்.
ஐக்கிய பேரவை எடுத்த முடிவை மக்கள் சரிகான வில்லை என்பது கண்கூடு. மக்களின் மனநிலையை பேரவை புரிந்து கொள்ளவில்லை.இனி பேரவை தனது செயல்பாடுகளை சுய பரிசோதனை செய்யவேண்டும். வாக்கு பெற்ற விபரத்தை பார்த்தால் அனைத்து மக்களின் ஓட்டு சகோதரி ஆபிதாவுக்கு கிடைத்துள்ளது தெரிகிறது.
சகோதரி ஆபிதா அவர்களே, உங்களின் ஆதரவாளர்கள் தேர்தல் நேரத்தில் சொல்லியபடியும் நீங்கள் உங்களது தேர்தலில் நிற்பதற்கு சொல்லிய காரணமாகிய பொதுசேவை செய்வதற்கு அல்லாஹ், நமதூர் மக்களின் மூலம் நல்ல வாய்ப்பு அளித்துள்ளான். அதில் அனைத்து மக்களின் நன்மைக்காக நீங்கள் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மன உறுதி & சரீர சுகத்தையும் தந்தருள துஆ செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross