Re:4200 வாக்குகளுக்கும் கூடு... posted byMohamed Buhary (Chennai)[21 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11616
நகராட்சித் தலைவர் தேர்தலில் துணிச்சலுடன் போரிட்டு அல்லது போட்டியிட்டு வெற்றி வாகை சூடி, நகரத் தலைவராக, காயல் நகர மக்களால் தேர்வு செய்யப்பட்ட, ஆபிதா ஷேக் அவர்களுக்கு வாழ்த்துகளும்... பாராட்டுகளும்...
இந்நேரத்தில் தகுதியான நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்பதில் அயராது பாடுபட்டு உழைத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் வாழ்த்துகளும்... பாராட்டுகளும்...
குறிப்பாக, நியாயத்திற்காகவும் நடுநிலையான நேர்மையான ஊழலற்ற நகர்மன்றம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்ட சில உள்ளங்களை இத்தருணத்தில் நினைகூர்ந்தே ஆக வேண்டும்.
இரவு பகல் பாராது நகரில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நகர்மன்றத்தில் நடக்கும் ஊழல்களையும் உலகுக்கும், உலகெங்கும் வாழும் காயலர்களின் கவனத்திற்கும் கொண்டுசென்று, மக்கள் மனதில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய, நம் காயல்பட்டினம்.காம் இணையதளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அல்லாஹ் இவர்களின் சேவையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வானாக. மேலும் இவ்விணையதளம் வாயிலாக ஏராளமான மக்கள் சேவையாற்ற அருள் புரிவானாக என இருகரமேந்தி துஆ செய்வோம்.
இவர்கள் நமது நன்றிக்குரியவர்கள்...
அடுத்ததாக நகர்மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வழிகாட்டு குழு [மெகா]வையும் இங்கு நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அவர்கள் ஆற்றிய சேவை அளப்பரியது. அவர்கள் பல சோதனைகளையும் கடந்து நடுநிலையுடன் நியாயமான எண்ணங்களுடன் நடந்துகொண்டனர். அல்லாஹ் இவர்களின் இந்த தன்னலமற்ற சேவையையும் அங்கீகரிக்க வேண்டும்.
இவர்களும் நமது நன்றிக்குரியவர்கள்...
மெகாவுக்கு இன்னொரு தலையாய பணி காத்திருக்கிறது: ஏற்கெனவே எனது முந்தைய பதிவில் [9535] குறிப்பிட்டதைப் போன்று,
“ஐக்கியப் பேரவை பொதுக்குழுவை கலைத்துவிட்டு, புதுக்குழுவை ஏற்படுத்துங்கள்... முதலாவது ஐக்கியப் பேரவைக்கு தேர்தல் நடத்துங்கள். தகுதி வாய்ந்தவர்களை அதில் பொறுப்பாளர்களாக அமர்த்துங்கள். அப்போதுதான் நமதூருக்கு விடிவுகாலம் பிறக்கும். நாம் எல்லோரும் சேர்ந்து ஐக்கியப் பேரவைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய கட்டமிது.“
ஐக்கியப் பேரவை என்றொரு அமைப்பு அவசியம் தேவை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. நியாயமான தன்னலமற்ற சமூகசேவை மனப்பாங்கு கொண்டவர்கள் இங்கு அதிகமதிகம் தேவைப்படுகிறார்கள். சில கரை படிந்த கறுப்பு ஆடுகள் அங்கு வலம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த ஆடுகள் இந்த சூழலை மனதில் கொண்டு ஓடிவிட வேண்டும். அல்லது அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.
மற்றபடி, நம் ஐக்கியப் பேரவை தலைவர்கள் இந்தச் சூழலை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டும்; நகர்மன்றத் தலைவரும் ஐக்கியப் பேரவை தலைவர்களைச் சந்திக்க வேண்டும். ஐக்கியப் பேரவை நகர்மன்றத் தலைவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும்.
إنما الأعمال بالنيات
எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. (ஹதீஸ்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross