Re:4200 வாக்குகளுக்கும் கூடு... posted byM.N.Sulaiman (Bangalore)[22 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11800
பொதுவாக நாம் தேர்தல்களில் ஒருவரை வெற்றி பெற வைப்பதின் காரணம், அந்த வேட்பாளரை பிடித்திருப்பதின் காரணத்தால் அல்ல...! உண்மையில் எதிர் வேட்பாளரை பிடிக்காததின் காரணத்தால் தான்...!
ஆனால், இன்று நம் நகரில் அது பொய்யாகி உள்ளது. வாக்களித்த அனைவரும் சகோதரி ஆபிதா அவர்களை மனமுவந்து தேர்வு செய்துள்ளனர். அவர்களது சமூக அக்கறையும், தொலைநோக்கு சிந்தனையும், தைரியமுடன் போராடும் பண்பு தான் மக்களை சிந்திக்க வைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நமது கடற்கரையில் ஒரு குழந்தை குப்பைகளை போட அங்குள்ள குப்பைதொட்டியை தேடி அலைந்ததை kayalpatnam.com பதிவு செய்ததை நினைவிருக்கலாம். சுற்றுப்புற சுழல் முக்கியத்தை அந்த குழந்தைக்கு கற்று கொடுத்தது வேறு யாரும் இல்லை....!
இன்று நம் நகர் தலைவியாக தேர்வாகி உள்ள சகோதரி ஆபிதா அவர்கள் தாம்...! அன்று அவர்களது சேவையை பாராட்டாத அன்பர்கள் இல்லை.
இந்த மாற்றத்தை தான் மக்கள் எதிர் பார்கிறார்கள்.
சிறந்த சுற்றுசுழல் மிகுந்த காயல் நகரை உருவாக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross