Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[23 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 11890
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
உறுப்பினர்களே உங்களுக்கு தரப்பட்டது பதவி அல்ல பொறுப்பு. உங்களுடையே முதல் பொறுப்பு, உங்களில் சிறந்தவரை இந்த புதிய நகர்மன்றத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுப்பது. அதில் நீங்கள் கீழ் கண்டவைகளை அளவுகோலாக வைத்துக் கொண்டால், இன்ஷா-அல்லாஹ் நல்ல ஒரு துணைத் தலைவர் நமக்கு கிடைப்பார்
1. இறை பக்தி உள்ளவராக (ஐவேளை தொழுபவராக)
இருத்தல் வேண்டும்.
2. பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவராக இருத்தல்
வேண்டும். சுய தொழில் செய்பவராக இருந்தால் நலம்.
3. படித்தவராக இருத்தல் வேண்டும்.
(பண்பாளராகவும், பொது மக்கள் இலகுவாக அனுகக்கூடியராக
இருத்தல் அவசியம்).
4. கொள்கை, ஜாதி, மதம், பணக்காரன், ஏழை பாகுபாடின்றி
செயல் படக் கூடியராகவும், கருணை உள்ளமுடையவராகவும்
அதே நேரத்தில் கண்டிப்புள்ளவராக இருத்தல் வேண்டும்.
5. அதிகாரத்திற்கும், பணத்திற்கும் தலை வணங்குபவராக
இருத்தல் கூடாது. தவறு நடக்கும் பட்சத்தில் துணித்து தட்டிக்
கேட்பவராக இருத்தல் அவசியம்
6. நமது நகர்மன்றத் தலைவர் பெண்ணாக இருப்பதால்,
துணைத் தலைவர் ஆணாக இருந்தால் நலம்.
இந்த அளவுகோலுக்கு சொதக்காரர் அல்லது அளவுகோலுக்கு நெருங்கிவருபவரை தேர்ந்தெடுக்கலாம். அவர் யார் என்பதை நான் உங்களுக்கு அடையாளம் காட்டத் தேவை இல்லை.
He is there among you and he can do justice to the post.
--------------------------- END -------------------------------------
ஒருவேளை உங்களுக்குள் (உறுப்பினர்களுக்குள்) ஒரு சுமுகமான் முடிவு வரவில்லை. அதிக உறுப்பினர்கள் இந்த பதவிக்கு ஆசை படுகிறார்கள் என்ற நிலை வந்தால், 7 வது வார்டில் நடந்தது திரும்பவும் நடக்கக் கூடாது என்று விரும்பினால், நீங்கள் (உறுப்பினர்கள்) இந்த பொறுப்பை சகோதர சமுதாத்தினருக்கு (பெருந்தன்மையுடன்) கொடுப்போம் என்று முடிவு செய்வீர்களேயானால், இந்த பொறுப்பிற்கு ததியானவர், இந்த பதவிக்கு நீதி செய்யக் கூடியவர் உங்களில் இருக்கிறார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross