வலைதளங்களுக்கு தலைவர்களை தேர்தெடுக்கும் அதிகாரமில்லை. posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[29 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 12479
புதிய துணை தலைவருக்கு பாராட்டுக்கள்.
நமதூரின் சூழ்நிலைகளின்படி, பெண் தலைவரைகாட்டிலும் ஆண் துணை தலைவருக்குதான் பணி நிமித்தமாக அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நம் புதிய துணை தலைவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
பெரியவர்களை நாம் புறக்கணித்ததின் விளைவாக ,இப்போது அரசியல் கட்சிகளின் தலையீடு தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
இனிவரும் காலங்களில் நமது ஊரில் அரசியல் கட்சிகள்தான் ஆட்சி செலுத்தும். அதற்க்கு இந்த தேர்தல் ஒரு முன்னோடி.
அரசியல் கட்சிகள் என்று வரும்போது தலைவர் பதவிக்கு நம் சமுதாயத்தை சார்ந்தவரும் வரலாம். அல்லது சகோதர சமுதாயத்தவர் வருவதும் தவிர்க்க முடியாது.
சில சகோதரர்கள் இந்த துனைதலைவரின் தேர்வை நாம் எதிபார்க்கவில்லையே என தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தனர். உண்மைதான்..
ஏனெனில் , தலைவர்கள் யார் என்பதை எப்போதும் வலைத்தளங்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியாது. கருத்துகணிப்பு என்பதெல்லாம் ஒரு மாயை. சிலவகை தந்திரங்கள். அவை எப்போதும் செல்லுபடியாகும் என்று சொல்லமுடியாது.
வாக்கெடுப்பில் 15 + 4 = 19 என்பது மோசமான் முன்னுதாரணம்.
நகரமன்ற தலைவர் நடுநிலையே வகித்திருக்க வேண்டும்.
அவர் வாக்கெடுப்பில் கலந்துகொன்டத்தின் மூலம் போதிய அரசியல் விவேகமில்லாதவர் என்பதும் நடுநிலையற்றவர் என்பதும் நிரூபணமாகிவிட்டது.
இனி அவர் நம் நகர் மன்றத்தை எவ்வாறு வழி நடத்துகிறார் என்பதை பொறுத்துதான், தலைவரின் திறமை நமக்கு வெளிப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross