Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர... posted bySalih (Chennai)[30 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12510
துணைத் தலைவருக்கான வாக்கெடுப்பில் நகர்மன்ற தலைவி வாக்களித்தது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நகர்மன்ற தலைவிக்கான வாக்குரிமை அரசினால் வழங்கப்பட்டது. அதனை ரகசியமான முறையில் அவர் துவக்கத்திலேயே பயன்படுத்தி உள்ளார்.
நகர்மன்ற தலைவி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் - இரு வேட்பாளர்களும் தலா 9 வாக்குகள் பெற்றிருந்தால் - சம நிலை ஏற்பட்டிருக்கும். அவ்வேளையில் நகர்மன்ற தலைவியின் வாக்கு (casting vote/tie breaker) தேவைப்பட்டிருக்கும். அச்சூழலில் அவர் வாக்களித்திருந்தால் - அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவசியமற்ற விமர்சனங்கள் வந்திருக்கும். ரகசியமான முறையில் துவக்கத்திலேயே வாக்களித்து - விமர்சனங்களை நகர்மன்ற தலைவி தவிர்த்துள்ளார் என்றே தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross