Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[30 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12525
துணைத் தலைவருக்கு வாழ்த்துக்கள்.
நேற்று தேர்தல் முடிவுக்காக நகர்மன்றத்திற்கு முன் கிட்டத்தட்ட 50 முதல் 80 நபர் வரை காத்திருந்தோம். அப்போது பலர் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர். குறிப்பிடும் படியாக உருப்படியான் பேச்சுக்கள் எதுவும் என் காதில் விழவில்லை. நான் எனது நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்குப் பழக்கமான சகோதர சமுதாயத்தைக் சார்ந்த ஒருவர் சொன்ன விசயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறவன்.
அவர் சொன்னது,
" நகரமன்ற தலைவர் தேர்தலில் (தனது கையை மேல் நோக்கி உயர்த்தி) ஆண்டவர் சகோதரி ஆபிதவுக்கு உதவி செய்தார். ஆனால் துணைத் தலைவர் தேர்வில் ( வடக்கு பக்கம் தனது கையை காட்டி) சென்னை ஆண்டவர் உதவி செய்துள்ளார்".
அப்பொழுது எனது நண்பர் குறுக்கிட்டு "ஏங்க இன்னும் தேர்வு முடிவு வரவில்லை அதற்குள்ளேயே இப்படி பேசுகின்றீர்களே,
சம்சுத்தீனுக்கு (துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்)
8 நகரமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கப் போவதாக அவரிடமே சத்தியம் செய்து கொடுத்துள்ளார்கள், மேலும் இருவர் வாக்களிக்கலாம் என்ற நிலை இருக்கிறது. நீங்க கடவுளை மறந்து பேசுகின்றீர்களே, என்றார்.
அப்பொழுது அந்த (சகோதர சமுதாயத்தை சார்ந்த) நபர்,
"இன்னும் நீங்க சிறு குழந்தையாகவே இருக்கின்றீர்கள். இந்த ரிசல்ட் நேற்று ராத்திரியே முடிவாகிவிட்டது. கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தாகிவிட்டது. இப்பொழுது நடப்பது சம்பிரதாயம் மட்டுமே. சென்னை ஆண்டவர் தனது திருவிளையாடலை தனது சொந்தக்காரர் மூலம் நடத்திவிட்டார். வேண்டுமென்றால் பாருங்கள் தேர்தல் Result 13 + 5 = 18 என்று வரும். என்றார். நானும் சிரித்துகொண்டு, தொலைப்பேசி அழைப்பு வந்ததால் அங்கிருந்து தேர்தல் முடிவு வருவதற்கு முன் சென்று விட்டேன். 30 நிமிடங்கள் கழித்து முடிவு வந்தவுடன் எனக்கு அந்த சகோதர சமுதாய சகோதரர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
எது எப்படியோ, இன்ஷா- அல்லாஹ் இன்னும் 5 வருடத்திற்கு இவர்தான் நமது துணைத் தலைவர். நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross