அரசு மருத்துவமனை posted bySK Salih (Dubai, U.A.E.)[28 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1303
இப்பகுதியை விவாதமாக்க நான் விரும்பவில்லை. எனினும் இங்கு பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை முற்காலத்தில் வேண்டுமானால் சுகாதாரக் குறைபாட்டுடன் பராமரிக்கப்பட்டிருக்கலாம். தற்சமயம் அங்கு தலைமை மருத்துவ அலுவலராகப் பணிபுரியும் டாக்டர் பாவநாசகுமாரின் தொடர்ச்சியான - தீவிர கண்காணிப்பின் பலனாக, அம்மருத்துவமனை நல்ல சுகாதாரச் சூழலுடன் பராமரிக்கப்பட்டு வருவதை, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்காக வாரந்தோறும் அங்கு மருந்துகள் வாங்க வரும் நமதூரின் அனைவரும் நன்கறிவர்.
டாக்டர் பாவநாசகுமார் வருகைக்கு முன் அங்கு பணியாற்றிய டாக்டர் சார்லஸ் அவர்கள், இம்மருத்துவமனையை இன்னும் சீர்படுத்துவதற்காக நகரின் முக்கிய அங்கத்தினர் பலரை தனது சொந்த முயற்சியில் வரவழைத்து, கருத்துக்களைக் கேட்டுப் பெற்று, இன்று பொலிவுடன் காணப்படும் மருத்துவமனைக்கான ஏற்பாட்டிற்கு அஸ்திவாரமிட்டார்.
அக்கூட்டத்தில் நமதூரின் பொதுநல ஆர்வலர் பாளையம் இப்றாஹீம் மாமா உள்ளிட்ட பெரியவர்கள் கலந்துகொண்டனர். இந்த அற்பனுக்கும் அதில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அக்கூட்டம் குறித்து நமது காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நிர்வாகத்தில் உண்மையிலேயே குறை இருந்தாலும் கூட அதைக் குறையாக வெளிப்படுத்தாமல், பணிவுடன் மாற்று ஆலோசனையாக வழங்குவதையே நான் தனிப்பட்ட முறையில் பெரிதும் விரும்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross