ஏழைகளுக்கு உரியது posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[28 November 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1306
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மூலிகைத் தோட்டம் வைக்க கோரிக்கை வைத்திருப்பது வரவேற்க தக்கது.
இன்ஷா அல்லாஹ்! அரசாங்கம் நமது கோரிக்கையை நிறைவேற்றி மூலிகைத் தோட்டத்தை அமைத்துவிடும்.
அதன்பின்பு அவற்றை முறையாக பராமரிக்கிறார்களா? என்பதை நாம் தான், கவனித்து அதை 'செயல்படுத்த' செய்து பயனடைய வேண்டும்.
மேலிடம் எப்போதுமே நமக்கு சரியாக அமைந்துவிடும், கீழே தான் எல்லா விசயங்களிலும் இடிக்கும்!!!!!!!.
-----------------------------------------------
அடுத்ததாக நம்ம ஊர் மருத்துவ மனையை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை.
அதை நாம் எல்லோரும் பயன் படுத்தும் போதுதான் அதனுடைய குறைகள் நமக்குத் தெரிய வரும்.
அதன் பின் அதை சீர் செய்து ஒழுங்காக பராமரிக்க முடியும்.
"அரசாங்க மருத்துவ மனை என்பது ஏழைகளுக்கு உரியது - நமக்கு வசதி இருக்கு - நாம் ஏன் அங்கே போக வேண்டும்" என்ற தப்பான
எண்ணம் நம்மில் பலரிடையே இருக்கிறது.
முதலில் அதை நாம் களைய வேண்டும்.
அரசாங்க மருத்துவ மனை என்பது நாட்டு மக்கள் அனைவர்களுக்கும் உரிமையானது என்பதை நாம் அனைவர்களும் உணர்ந்து அதை பயன்படுத்தினோமானால் அதில் உள்ள குறைகள் அவ்வப்போது களையப்பட்டு நிறைவான சேவையை பெற முடியும்.
நாம் அனைவர்களும் முறையாக பயன்படுத்தி பயன் பெறுவோமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross