Re:ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம... posted byMACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM)[07 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14238
மொகுதூம் பள்ளியில் பத்தாவது நாள் நோன்புதிறக்க பெருந்திரளான மக்கள் கூடியிருந்து சிறப்பாக நோன்பு திறந்து துஆ செய்த காட்சியை படம்பிடிதீர்களே, அதை ஏன் வெளியிடவில்லை, ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் ஒரு கண்ணுக்கு எண்ணெயும் வைத்தால் கண்பட்டு விடுமா அல்லது கண் கெட்டு விடுமா?
மக்கி நூஹுதம்பி
Moderator: படம் எடுக்கப்பட்டது உண்மைதான்! ஆனால், அப்பள்ளியின் நிர்வாகி ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் அவர்கள், “வலைதளத்தில் செய்தி வெளியிட வேண்டாம்... படமும் போட வேண்டாம்...” என்று தெரிவித்தார்கள். நிர்வாகத்தின் சார்பில் அழைக்கப்பட்டே அங்கு வந்ததாக நாம் தெரிவித்தோம். “அழைத்தவர்கள் தெரியாமல் அழைத்திருக்கலாம். நான்தான் ஜவாப்தாரி. எனவே, தயவுசெய்து செய்தியோ, படமோ வெளியிட வேண்டாம்” என்று அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்நிர்வாகத்தின் சார்பில் மறு உத்தரவு கிடைக்கும் வரை செய்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நமது வலைதளத்தில், வெண்ணெய் - சுண்ணாம்பு வணிகத்திற்கு எல்லாம் எந்த இடமும் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross