செய்தி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நகர தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முல்லைப் பெரியாறு அணை விவ... posted byseyed mohamed (KSA)[13 December 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14480
அருமை சகோதரர்களே,
இது முற்றிலும் கேரள கம்யூனிஸ்ட்களின் வேலை. பிரச்சினையை விஸ்வரூபம் எடுக்க செய்தது அவர்களே. எந்த மாநிலத்திலும் அவர்களது ஆட்சி இல்லை. கேரளம் மட்டும்தான் துருப்பு சீட்டாக உள்ளது.
பிரவம் இடை தேர்தலில் அவர்கள் ஜெயித்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. பதவி சுகம் கண்ட அச்சுமாமன் என்னும் அச்சுதானந்தன் மீண்டும் முதல்வராக துடித்து கொண்டிருக்கிறார். எனவேதான் காலை பத்து மணிக்கு உண்ணா விரதம் தொடங்கி ஐந்து மணிக்கு முடித்துவிட்டு ஆவேசம் பொங்க " கொல்லறது கொல்லறது கொல்லறது வெள்ளம் கொடுகின்னவர கொல்லறது " என்று என்னவோ தமிழ் மக்கள் கேரள மக்களை கொன்று குவிப்பது போலவும் கேரள சகோதரர்களின் பிணங்களின் மேல் படுத்து தூங்குவது போலவும் ஆவேசமான பேச்சை பேசி உசுப்பேத்திவிடுகிறார்.
எனவே தமிழ் ஜனங்கள் அறவழியில் நடத்தும் இது போன்ற நியாயமான போராட்டங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் அல்லது இதில் திமுக அதிமுக என்று அரசியல் பேசகூடாது. தமிழர்களின் உரிமை எங்கு சென்றாலும் எளிதில் பறிக்கப்பட்டு விடுகின்றன. இந்த அவல நிலை மாறிட வேண்டும் எந்த கட்சியானாலும் தமிழனின் உரிமைக்காக போரடுமானால் அதற்கு முழு ஆதரவு அளிப்போம்.
உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். கேரளம் என்னும் தேங்காய் விளையும் நாடு தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு உருவாக்கப்பட்டது. கேரள நண்பர்களிடம் முல்லை பெரியாரின் உண்மை நிலையை ஈமெயில் மூலமும் மற்ற ஊடகங்கள் மூலமும் தெளிவாக எடுத்துரைப்போம் அவர்களின் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குவோம். தெளிவு பெற்றால் அவர்கக்கு நல்லது.
இங்கே விளையும் விவசாய பொருகளில் அதிகம் அவர்கள்தான் லாபமடைகிறனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross