Re:வாவு வஜீஹா வனிதயைர் கல்லூ... posted bymackie noohuthambi (colombo)[22 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17793
வாழ்த்துக்கள். காயல்பட்டினத்தில் ஒரு கல்லூரி வரவேண்டும் என்ற எல்லோரது கனவையும் நனவாக்கிய வாவு செய்யது அப்துர் ரஹ்மான் ஹாஜி அவர்களுக்கு பாராட்டுக்கள். நான் 1993 இல் நடைபெற்ற ஊர் கலவரத்தில் சிறை சென்றிருந்தபோது எங்களை வெளியே கொண்டு வர அரும்பாடு பட்டவர்களில் வாவு மொகுதூம் ஹாஜியார் அவர்கள் முதன்மையானவர்கள். அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த பொது சம்சுதீன் மாமா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
மாணிக்க வியாபாரியாக உங்கள் தந்தை வெற்றிக்கொடி நாட்டியபோது, அவர்களை மாணிக்க வியாபாரிகளுக்கு மட்டுமே அடையாளம் தெரியும். ஆனால் பொது வாழ்க்கையில் அவர்கள் தன்னை இணைத்துக்கொண்டு சேவை ஆற்றியபோது என்னைப்போன்ற சாமான்யனும் அவர்களை அடையாளம் காண முடிந்தது.
இது இன்று செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களுக்கும் பொருந்தும். வரலாற்றில் உங்கள் பெயர் மாணிக்க வரிகளால் பொறிக்கப்படும். நீங்கள் மாணிக்க வியாபாரி என்பதால் அல்ல, 203 வல்லுனர்களை பெண்மணிகளை பட்டதாரிகளாக நாட்டில் வலம் வர செய்திருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. இதை போல் வேறு சில கல்லூரிகளும் நமதூருக்கு தேவைப்படுகிறது. டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் இந்த துறையில் முன்னோடியாக இருப்பதால் அவர்கள் ஆலோசனையையும் நீங்கள் பெற்று அவற்றை இந்த ஊருக்கு செய்யுங்கள்.
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் எனபது கேள்வியில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்கையில் தோல்வியில்லை. அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக. வாழ்த்துக்களும் து ஆ க்களும் உங்களை அடைய வளையட்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross