சுனாமிக்கு நன்றி posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[11 April 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18187
எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
அப்பாடா... சற்றே நிம்மதி..
நிலநடுக்கம், சுனாமி சென்னையில் உணரப்பட்டது என்றதும் என் உறவினர்களுக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். சிறிது நிலநடுக்கம் வந்தவுடன் அனைத்து மக்களும் அலறியடித்துக்கொண்டு வீட்டை/பிளாட்களை விட்டு ரோட்டிற்க்கு வந்து விட்டார்களாம். அவர்கள் (அம்மணிகள்) பேசியத்தில் காதில் விழுந்தது என்று உறவினர் கூறியது..
- நாங்களும் 8 வருடமாக இருக்கின்றோம்..நீங்க எந்த ஊரு.
- நாங்க தெற்கே.. உடன்குடி.
- அப்படியா.. நாங்க உங்களுக்கு அருகில் தான், காயல்பட்டினம்.
- அய்யய்யோ.. இவ்வளவு பக்கத்தில் இருந்தும் ஒரு நாள் கூட உங்களிடம் பேசவே இல்லையே..நீங்க வடநாட்டு ஆள் என்று தான் நினைத்தோம்.. நல்லா இருக்கின்றீர்களா, எத்தனை குழந்தைகள், கண்ணாடி போட்ட ஒரு பையனை பார்த்து உள்ளேன், வீட்டுக்கு வாங்க..
*** இப்படியே தொடர்ந்ததாம் உறவு.. 8 வருடங்கள் கழித்து.., இது தான் பட்டினத்தில் உள்ள மனித உறவுகள்..ஆக சுனாமிக்கும் நாம் நன்றி சொல்லனும் தானே...!! **
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross