Re:கோடை விடுமுறையை முன்னிட்ட... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852a)[28 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18589
அஸ்ஸலாமு அலைக்கும்,
T.M. Rahmathullah Haji, உங்களது கேள்v பற்றி சிறிய பதில். நீங்கள் எனக்கு எழுத்து துறையில் வழிகாட்டியும், ஏராளமான தகவல் தந்து உதவியவரும், நல்ல ஆலோசகறும், என்னால் பேரறிஞராக போற்றி மதிக்கப்படும் உங்களுக்கு பதில் தர - ஒரு மாணவன் என்ற முறையில் அச்சமாக இருக்கிறது. பதில் தராவிட்டால் - உங்கள் மாணவனாக இருக்க தகுதியை இழந்துவிடுவேனோ? என்ற ஓர் பயம் ஒருபுறம் எண்ணெய் பிடித்திருக்கிறது.
உருவம் என்பது வடிவம் சரிதான், அகராதியில் நானும் படித்திருக்கிறேன் உருவம் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என்ற உங்கள் விவாதத்தில் சிறிய பிழை காணப்படுகிறது. பழம், காய்கறி, மலர்கள், உயிரற்ற உருவமாக கருதப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹலாலான மிருகம், பறவைகளை அறுக்கும் போது அதற்க்கு வேதனையாக அல்லாமல், கூரிய கத்தியால் அறுக்கும் படி உள்ள ஹதீசுகள் புஹாரி ஷரீப் 7275 ஹதீசுகளில் பலமுறை ரஜபு மாதத்தில் கேட்டிருக்கிறேன். பல்வேறு உலமாக்கள் பேசும் கூட்டங்களிலும் மிருகங்கள், பறவைகள் அறுப்பது பற்றி பல ஹதீசுகளை மேலே சொன்ன மாதிரி கேட்டு வந்துள்ளேன். ஒரு இடத்திலாவது பழங்களை, காய் கனிகளை, மலர்களை அறுக்கும்போது வேதனை செய்யாதபடி வெட்டுங்கள் என்று இதுவரை ஒரு ஹதீஸை கூட கேட்டதில்லை. நீங்கள் கேட்டதற்கு இதிலே பதில் அடங்கயுள்ளது.
உருவமற்ற ஓவியம் என்ற சொல்லுக்கு வேறு என்ன பெயர் வைத்து நான் எனது ஓவிய பள்ளிக்கு போடுவது? நீங்கள் தான் எனக்கு இம்மாதிரியான, புதுமையான, குதர்க்கமான, வினா எழுதி கேட்டு உள்ளீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. உலகம் சுற்றும் இளைஞரான நீங்களா? இப்படி இந்த சின்ன பிள்ளையிடம் கேட்பது.
இன்ஷா அல்லாஹ் எனது ................................. ஓவிய பள்ளி மே 2 ல் சமுதாய கல்லூரியிலும்,மே 3 ல் ரஹ்மானியா பள்ளியிலும் துவங்க உள்ளது. உங்களது பகுதியில் சிறு பிள்ளைகள் இருந்தால் கோடை விடுமுறையில் சேர்ந்து பயனடைய சொல்லுங்கள். விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது 68 A KTM Street வாவு நெய்னா தலைவாசல் வழியாக வந்து ருபாய் 100 செலுத்தி முன்னதாக பெற்றுக்கொள்ள சொல்லவும்.
குற்றால சீசன் ஆரம்பித்துவிட்டது. உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒருநாள் முழுவதும் உங்களோடு இருப்பதற்கு, உங்களுடைய அறிவு ஞானத்தை அருவி போல் பெற்றுக்கொள்ள ஆசை பலாண்டுகள் மனதில் வைத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு இந்த சான்சு தருவீர்களா? காத்திருந்து காத்திருந்து பார்க்கின்றேன்.
எழுத்தாளர், சமூகன் ஆர்வலர்,
ALS ,
ஓவியர், ஆலோசகர்- ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்சிக் குழு,
காயல்பட்டினம்.
இதற்கான பதில் ஒரே சொல் =உயிரற்ற ஓவியம் அல்லது வடிவம் . சரிதானா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross