வருக, வருக நிகழ்காலம் posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[06 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18689
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
" நிகழ்காலம் " பத்திரிக்கையை வருக, வருக என்று வரவேற்போம் - அது நடுநிலையான பத்திரிக்கையாக நல்லவர் போற்றும் பத்திரிக்கையாக பவனி வரும் என்பதில் சந்தேகமில்லை.
செய்திகளை வலைத் தளங்களில் படிப்பதற்கும் பத்திரிக்கைகளில் படிப்பதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.
வலைத்தளங்கள் இல்லாத இடங்களுக்கெல்லாம் பத்திரிக்கைகள் செய்திகளை கொண்டு போய் சேர்க்கும் - காயல்பட்டணம்.காம் மூலம் நிறைய உபயோகமான செய்திகள் மக்களுக்கு போய் சேர்ந்தாலும் அது ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் இருக்கிறது - அதாவது வலைத்தளம் பார்க்கக்கூடியவர்கள் மட்டுமே முழுமையான செய்தியை உணரும் நிலையில் இருக்கிறது.
பத்திரிகை செய்தியாக வரும்போது எல்லாத் தரப்பு மக்களும் எல்லா நேரமும் முழுச்செய்தியையும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது ஆகையால் இந்த பத்திரிக்கை இன்றைய கால சூழலுக்கு அவசியம் தேவை.
ஆ....ஆ .......மா.......... எங்களைப் போன்றவர்கள் கிறுக்குவதற்கும் இடம் உண்டா ?
எல்லாம் வல்ல அல்லாஹ்! " நிகழ்காலம் " பத்திரிக்கையை விரைவில் வெளிவரச்செய்து - இறந்த காலத்தையும் மறக்காமல் , எதிர் காலத்தையும் இழக்காமல் - இனிதாய் நிகழ்காலத்தை எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயன் பெறச்செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross