Re:நிகழ்காலம் ... மாதமிருமுற... posted bymackie noohuthambi (kayalpatnam)[06 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18693
"நிகழ்காலம்" மாதமிருமுறை பத்திரிகை யார் வெளியிடுகிறார்கள் சந்தா எவ்வளவு என்பதெல்லாம் "சஸ்பென்ஸ்" ஆரம்பமே இப்படி சஸ்பென்ஸ் ஆக இருக்கிறதே.
பத்திரிகை ஆரம்பிக்கிறோம் என்று சொல்வது ஒரு சாதாரண செய்தி ஆக இருக்கலாம். ஆனால் பத்திரிகை நடத்திக்கொண்டு திக்கு முக்காடி கொண்டிருப்பவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு சிரமமான விஷயம் எனபது. பொருளாதார வசதிகள் நிறைய தேவை என்பதைவிட பத்திரிகை தர்மம் எனபது மிக முக்கியம். சவால்கள் நிறைந்த இந்த யுகத்தில், காய்தல் உவத்தல் இன்றி செய்திகளை தரமுடியுமானால் அதுவே பெரிய விஷயம்.
எனக்கென்னவோ உள்ளூர பயமாக இருக்கிறது. என்னடா ஆரம்பிக்கும்போதே பயம் காட்டுகிறானே என்று எண்ணாதீர்கள். ஒரே வரியில் வாழ்த்துக்கள் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. பல பத்திரிகைகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டவன் நான்.
எவ்வளவு நியாயமாக எழுதினாலும் குற்றம் கண்டு பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு தப்பாக எழுதினாலும் அது தங்களுக்கு சாதகமானதாக இருந்தால் பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். பாராட்டுக்களும் குற்றச்சாட்டுக்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. அதை ஜீரணித்து கொள்ளும் பக்குவம் ஆசிரியர் குழுவுக்கு மிக இன்றியமையாதது.
" வாய்மையே வெல்லும்" என்று ஸ்லோகங்கள் எழுதுவதால் வாய்மை வென்றுவிடாது. நிமிர்ந்த பார்வை நேரிய நடை, உண்மையின் உரைகல், உண்மைக்கு முதலிடம் என்றெல்லாம் எழுதுவார்கள். ஆனால் நடைமுறையில் ஏதாவது ஒரு கட்சிக்கு சார்பாக இருப்பார்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்
NON ALIGNED NATION என்று நமது நாட்டை அழைப்பார்கள். அதே போல் இந்த இதழும் அமைய வாழ்த்துக்கள். எங்கள் ஆதரவு நேர்மையின் பக்கம், ஒற்றுமையின் பக்கம் எப்போதும் இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross