Re:மே 21, 22 ஆகிய தினங்களில்... posted bymackie noohuthambi (kayalpatnam)[19 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18917
மிக அருமையான முயற்சி.
மாணவ மாணவிகளை இந்த செய்தி சென்றடைந்துள்ளதா என்று தெரியவில்லை.ஜும்மாவில் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. வீடு வீடாக தாய்மார்கள் கரங்களில் இவை கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். பள்ளிவாசலில் கொடுக்கப்பட்ட நோட்டிஸ்கள் எத்தனையோ தெருவில் கேட்பாரற்றுக்கிடந்தது.
நமதூரில் கல்யாணத்துக்கு பெண்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு சில சகோதரிகள் அதற்காகவே செயல்படுகிறார்கள். அவர்கள் மூலம் தாய்குலத்துக்கு இந்த செய்தி முற்கூட்டியே கிடைத்தால் அவர்கள் இதில் அக்கறை எடுத்து தங்கள் மக்களை இதில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வார்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் நிச்சயம் இதை செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
வெற்றி வாய்ப்புகளை இழந்தவர்கள்," வெற்றி தோல்விக்கு அடுத்த வீட்டில்தான் குடியிருக்கிறது" என்ற உண்மையை உணர்ந்து செயல்பட, தங்களை எதிர்காலத்துக்கு தயார் செய்து கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
நல்லவைகள் நடக்க பரிந்துரை செய்பவர்கள், அதற்காக வியூகம் வகுத்து கொடுப்பவர்களுக்கு அந்த நன்மைகளில் பங்கு உண்டு என்று அல்லாஹ் சொல்வதுபோல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நமது இளைய சமுதாயத்தை துணிவுடன் முன்னேறுவதற்கு வழி வகுத்து கொடுக்கும் இவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக, இந்த நிகழ்ச்சி இளைஞர்களின் மகத்தான வரவேற்பை பெற்று, ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்த அல்லாஹ் துணை நிற்பானாக.வாழ்த்துக்களும் து ஆக்களும் இவர்களுக்கும் இதில் கலந்து கொள்பவர்களுக்கும் நிறைய வந்து அடையட்டுமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross