எங்கே செல்லும் இந்த பாதை? posted byFirdous (Colombo)[12 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20633
அஸ்ஸலாமு அலைக்கும். நண்பனின் கட்டுரை மிக அருமை! உன்னில் இவ்வளவு எழுத்தாற்றல் இருகிறதா என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. உன்னை போன்ற நமதூர் எழுத்தாளர்களை வெளி உலகுக்கு கொண்டு வரும் kayalpatnam.com க்கு Hats off!
பல விசயங்களை எளிய நடையில் படம்பிடித்து காண்பித்தாய். மிக அருமையான, இக்காலத்திற்கு இன்றிமையாத கட்டுரை. உனது பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சிகிறேன்.
மார்க்க கல்வியும் உலக கல்வியும், நாணயத்தின் இருப்பக்கங்கள் மாதிரி! இதில் ஒன்று இல்லையென்றால் அதன் மதிப்பு ௦.
சீனா தேசம் சென்றாலும் சீரிய கல்வியை கற்றுகொள் என்பது நபி மொழி! நாம் கல்வியை மார்க்க கல்வி என்று மொழிபெயர்த்து கொண்டோம். என்று நாம் பிரித்தோமோ அன்றே நமது சமுதாயம் வீழ்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது.
நமதூரில் வெகுசில குடும்பங்களை தவிர மற்ற பெரும்பான்மையான பெற்றோர்கள் - தனது பிள்ளைகளில் உலக கல்வியில் தேறாத, வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளை மதரசாவிற்கு அனுப்புவார்கள். இவர்களின் மார்க்க அறிவு என்னிலை? இதிலும் தேர்ச்சிபெருபவர்களும் உண்டு! மற்றவர்களின் நிலை?
இப்படி வெளியாகும் அறிஞர்கள் கொடுக்கும் பத்வாகளின் தரம், அதை ஏற்கும் மக்களின் நிலை?
எனது பள்ளிக்காலங்களில், moral education என்று வாரத்திற்கு ஒரு வகுப்பு மார்க்க கல்வி பாடம் எடுப்பார்கள். இன்று அது கூட இல்லை. நம்மவர்கள் நடத்தும் கல்விநிலையங்களில் ஏன் கட்டாயமாக்க கூடாது? முன்புபோல் மதரசாவிற்கு பிள்ளைகளை அனுப்புவது இல்லை. வாரத்தில் ஒரு நாளாவது பிள்ளைகளுக்கு ஒய்வு வேண்டாமா என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள். பள்ளியில் அனுமதிக்காததால் தொழுகைகளை விடும் மாணவர்கள் எத்தனை பேர்? இதில் மற்றும் தௌஹீத், சுன்னத்வல் ஜமாஅத், தப்லீக் என்று அனைத்து கொள்கையில் உடையவர்கள் ஒற்றுமையை காணலாம்.
இந்நிலை மாற வேண்டும். நமதூருக்கும் சிலோனில் இருக்கும் நலீமிய்யா போன்றதோர் கல்விநிலையங்கள் வேண்டும்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross