Re:நான் எதிர்பார்க்கும் நகர்... posted byvsm ali (Kangxi, Jiangmen , China)[15 August 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 20856
அஸ்ஸலாமு அழைக்கும்..
தங்களின் கட்டுரை நன்று . சமூக ஒழுக்கம் , நாம் தேர்ந்தெடுக்கும் நபரை பொருத்தது. இறைவனுக்கு அச்சம் உள்ளவர் , எண்ணத்தில் சுத்தம் உள்ளவர் , பிரதி பலன் எதிர்பாராதவர் இவர்களே தகுதியான மன்ற உறுப்பினர் .
நல்ல உறுப்பினர்கள் இருந்தால் மட்டும் போதுமா ? மக்கள் ஒத்துழைக்க வேண்டுமே ? " திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " நல்ல வரிகள் . இன்று பல வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி , வசதியற்றவர்களுக்கு " அவர்களின் கண்ணீரையே " தண்ணீராக கொடுக்கும் அவல நிலை. வீடு கட்டுகிறேன் , கான்க்ரீட் போடுகிறேன் என்று சொல்லி , எப்போதோ நடக்க வேண்டிய வேலைக்கு , இப்போதே கற்கள் , மணல் போன்றவற்றை தெருவில் போட்டு , நகரை அலங்கோலமாக்கி வைக்கின்றனர். இதையெல்லாம் ஒரு நகராட்சி உறுப்பினர் வீடு வீடாக போய் பார்க்க சாத்தியமா ? ஒவ்வொரு தனி மனிதனும் , இப்படி செய்வது தவறு என்று வருந்த வேண்டும்.
அடுத்து தாங்கள் குறிப்பிட்ட போதை வஸ்துக்கள் தடை , ஆட்டோக்காரர்களின் வரம்பு மீறல்கள் கடுமையான சட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இதில் கூட்டாளி , சொந்தக்காரன் என்று முகதாட்சண்யம் பாராமல் , நகராட்சிக்கென்று உள்ள சட்டத்தின் மூலம் சரி செய்ய முயல வேண்டும்.
அடுத்து , கடற்க்கரை . இது பொது சொத்து . எல்லா மதத்தினரும் , எல்லா ஊர் காரர்களும் வருவார்கள் . நாம் தடை பண்ண முடியாது. .காவல்துறை மூலமே வரம்பு மீறுபவர்களை கண்டிக்க வேண்டும். மற்றபடி , கலாச்சாரம் , கண்ணியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை . நாம் கண்ணியமாக நடந்து கொண்டால் , பிறர் நம்மை சீண்ட மாட்டார்கள்.
அடுத்து DCW பற்றி எழுதி இருக்கிறீர்கள். புற்று நோய்க்கு இது மட்டும்தான் காரணமா ? நமது ஊரின் உணவு , மேலும் பல காரணங்கள் உண்டு. DCW வை மட்டுமே சாடும் நாம் , இதில் கிடைக்கும் வருவாயை பற்றி வாய் திறப்பதில்லை . மேலும் , சமீபத்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டின் மலரை பார்த்தேன் . DCW விளம்பரத்தை பெற்றிருந்தார்கள். இப்போது மட்டும் DCW இனிக்கிறதா ? நாட்டின் பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண்மணிக்கு புற்று நோய் என்று செய்தி . அவர் எப்போதாவது DCW பக்கம் தலை காட்டி இருப்பாரா ? பின் , அவருக்கு எப்படி இந்த நோய் வந்தது ?
இது என்னுடைய கருத்து . நாம் தேர்ந்தெடுக்கும் நபர் , ஊரிலேயே இருந்து வியாபாரம் செய்பவராகவும் , பொது நலத்தில் ஆர்வம் உள்ளவராகவும் , நடுத்தர வயதுடையவராகவும் , இருப்பது நல்லது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross