Re:நான் எதிர்பார்க்கும் நகர்... posted byகுல்குஸ்மா முத்துவாப்பா... (???-?????)[16 August 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20865
நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக .....
இந்த சிறியவனின் கட்டுரைக்கு மதிப்பளித்து வெளியிட்ட காயல்பட்டணம் .காம் குழுவினற்கும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னுடையை கட்டுரைக்கு கருத்து எழுதிய நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
VSM அலி காக்கா அவர்களின் கருத்துக்களை தனியாக எடுத்துப் போட்டாலே தனி கட்டுரையாக அமைந்து விடும் அவ்வளவு அருமையாக இருந்தது .
சமூக ஒழுக்கம் உள்ள நபரை தேர்ந்தெடுத்தால் நம் மக்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பது எனது கருத்து. மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது , மணல் போன்றவற்றை தெருவில் கொட்டுவது எல்லாம் கண்டிப்பாக தடுக்க வேண்டும் . தனி மரம் தோப்பாகாது ,நாம் அனைவரும் சேர்ந்து கை கோர்க்க வேண்டாம் , நம் கை கொண்டு நம் குடும்பங்களில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை தடுத்தாலே போதும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
மின்சார பில் கெட்டவில்லை என்றால் எப்படி பியூசை பிடுங்குகிறார்களோ, அது போல தான் ஆட்டோ காரர்களை சரி செய்தாலே அதன் உரிமையாளரும் ஒரு வழிக்கு வந்துவிடுவார்.
DCW மூலம் நமதூர் மக்களுக்கு புற்று நோய் பரவுவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ள தெளிவாக தெரிந்த ஒன்று . வருவாய் வருகின்றது என்பதற்காக தங்க ஊசியை எடுத்து கண்ணை குத்த முடியாது அல்லவா ..? , தாங்கள் குறிப்பிட்டது போல் மாநாட்டு மலரில் DCW விளம்பரம் போட்டிருந்தார்கள் நானும் பார்த்தேன் . அதனால் தான் DCWவிற்கு எதிராக குரல் கொடுக்கும் நபரை நாம் தேர்தெடுக்க வேண்டும் என்று கூறுகின்றேன் ... நான் நமதூரில் புற்று நோய் பரவுவதற்கான ஒரு காரணம் DCW என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர இந்தியாவிற்க்கு அல்ல .. காயல் பட்டணத்தில் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை என்று நம் நகராட்சி மீது குறை சொன்னால் , டெல்லியிலும் தான் தெரு விளக்கு சரியாக எரியவில்லை அதற்கும் நம் நகராட்சி தான் காரணமா என்று தாங்கள் கேள்வி கேட்டால் நான் என்ன பதிலளிப்பது சிரிப்பதை தவிர ...?
தாங்கள் சொல்வது போல் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் , ஊரிலேயே இருந்து வியாபாரம் செய்பவராகவும் , பொது நலத்தில் ஆர்வம் உள்ளவராகவும் , நடுத்தர வயதுடையவராகவும் , இருப்பது நல்லது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross