Re:பாதாள சாக்கடைத் திட்டம் க... posted bymackie noohuthanbi (kayalpatnam)[31 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 20894
அபுல் ஹசன் அவர்களின் பாதாள சாக்கடை திட்டம் பற்றிய விழிப்புணர்வு அறிக்கை பல வேதியல் உண்மைகளை சாதாரண மக்களும் அறிந்து விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. நன்றி.
ஆனால் இந்த நகர்மன்றம் இது பற்றி என்ன முடிவு சொல்லப்போகிறது. அரசு சொல்லும் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றினால்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற அவல நிலையில் தலைவரும் உறுப்பினர்களும் இருந்தால் அபுல் ஹசன் காக்க சொல்வது விழலுக்கு இரைத்த நீராக போய்விடும். இல்லை, அபுல் ஹசன் காக்க சொல்வது சரியில்லை, இதோ எங்கள் மாற்று கருத்து என்று தன்னிலை விளக்கம் அளித்தால் அதையும் மக்கள் சீர் தூக்கி பார்த்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.
கடந்த காலங்களில் ஊர் மக்களை கலக்காமல் நிர்வாக அதிகாரியின் முழு ஆதிக்கத்தில் நகர்மன்றம் இயங்கி வந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான ஆட்சி, நகர்மன்றம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் மக்கள் ஆதரவுடன் மக்களின் நல்வாழ்த்துக்களுடன் தான் நடக்கும் என்று கோஷமிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ள சகோதரி ஆபிதாவின் ஆட்சி சற்று சுறுசுறுப்பில்லாமல் இருப்பதாக மக்கள் உணர தலைப்பட்டுள்ள இந்த நேரத்தில் அபுல் ஹசன் காக்காவின் அறிக்கைக்கு தலைவரின் தெளிவான விளக்கத்தை மக்கள் எதிர்பார்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross