Re:பாதாள சாக்கடைத் திட்டம் க... posted byMohammed Ismail Buhari N.T. (Chennai)[27 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20911
நீண்ட அனுபாவமும் ஆற்றலும் மிக்க ராவன்னா அபுல்ஹசன் ஹாஜியார் அவர்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளது என்பதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் நமதூருக்கு நன்மையாகும். அவர்கள் சொல்லுவதுபோல் (உதாரணமாக - ஆறுமுகநேரியிலும் மற்றும் கடல் இல்லா நமது சுற்றுப்புற ஊர்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தினால்) நாளை நம்மூர் குழாய்களில்தான் மற்ற ஊர் குழாய்களையும் இணைத்து விடுவார்கள் எனபது உண்மைதானே. ஊர் நன்மையை உணர்ந்து நகராட்சி நிர்வாகம் செயல்படனும். இல்லையேல் சீட்டை காலிபண்ணிட்டு மற்றவர்களுக்கு இடம் தரணும்.
ஏற்கனவே சாகுபுரத்தின் தொழிற்சாலையால் நம்மூர் கடல் மாசுபட்டு இருப்பதையும் உணர்வதுடன் - நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்தில் போய்விடும் என்பதையும் கவனத்தில் எடுக்கணும். பாதாள சாக்கடை திட்டம் மொத்தத்தில் காயல்பட்டினத்திற்கு எவ்விதத்திலும் பொருந்தாது என்பதை ஆழமான கருத்துக்களுடன் தந்துள்ளார்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross