Re:பார்வை படாத பக்கங்கள்!... posted bymackie noohuthambi (colombo)[23 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20991
அட்டகாசமான மன அழுத்தங்கள். தோல்வியில் துவண்டு விட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராக உங்களை பார்க்கிறேன். சில வருடங்களுக்கு முன் காயிதே மில்லத் நற்பநிமன்றதில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நான் இந்த கருத்தை சொன்னேன். வெற்றி பெற்றவர்களுக்கு வெண் சாமரம் வீசி வாழ்த்துகிறோம். தோல்வியில் துவண்டுவிட்டவர்கள் அவர்கள் தோற்பதற்கு என்ன காரணம் என்று கண்டறிந்து அவர்களையும் கை தூக்கி விட வேண்டாமா என்று கேட்டேன்.
சமீபத்தில் நான் படித்த THE POWER OF POSITIVE THINKING என்ற புத்தகத்தில் நான் இந்த வயதிலும் கற்றுக்கொண்ட பாடம் THE ONLY WISE RATE AT WHICH TO LIVE IS GOD'S RATE. GOD GETS THINGS DONE AND THEY ARE DONE RIGHT AND HE DOES THEM WITHOUT HURRY HE NEITHER FUMES NOR FRETS. HE IS PEACEFUL AND THEREFORE EFFICIENT. IF YOU THINK YOU CAN DO, YOU ARE RIGHT. IF YOU THINK U CANNOT DO, YOU ARE RIGHT.
தெளிவான திட்டம், கடும் உழைப்பு, விடா முயற்சி, இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வானம் வசப்படும் தூரம்தான். மாணவ மாணவிகள் இதனை கருத்தில் கொண்டு படியுங்கள். தஹஜ்ஜத் தொழுகை ஒரு சரியான அவ்டதம். நாம் கேட்கும் பிரார்த்தனைக்கு அல்லாஹ் நம்மை அருகிவந்து நிறைவேற்றி தருகிறான், தேவை இறைவன் மேல் அபரிமிதமான நம்பிக்கை. அடுத்து மன ஓர்மை. நாம் ஈடுபடும் வேலையில் படிப்பில் ஒன்றிவிடுவது. இவற்றுக்கு தடையாக இருக்கும் எவற்றையும் பெற்றோர்கள் செய்யாமல் இருப்பது பெரும் உதவியாக இருக்கும் .
நண்பர் புகாரியின் ஆதங்கம் புரிகிறது, உங்கள் கருத்துக்களோடு எனக்கு 100 % உடன்பாடு. மாற்று ஏற்பாடுகளை முன் வையுங்கள் ஊர் கூடி தேரிழுப்போம் எனபது போல் ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள். வித்தியாசமாக சிந்திப்போம் சிந்திக்கதூண்டுவோம். வெற்றி பெறுவோம். பரீட்சைகளில் அபரிவிதமான வெற்றி கிட்ட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நன்றியுடன் நூஹுதம்பி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross