பார்வை படவேண்டிய தருணம் இது!! posted bySalai. Mohamed Mohideen (USA)[26 March 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20998
கவனத்தில் கொள்ளவேண்டிய நியாயமான அக்கறை / கவலை. பொதுவாக, வெற்றி பெற்றவர்களை ‘அண்ணாந்து’ பார்க்கும் நாம், தோற்றவர்களை 'ஏறெடுத்துக் கூட' பார்ப்பதில்லை. இதற்க்கு மாணவ சமுதாயம் மட்டும் விதி விலக்கா என்ன?
ஒரு தடவை 'படிப்பில்' சறுக்கி விட்டோம் என்பதற்க்காக
‘வாழ்வில்’ தோற்று விட்டோம் என்று 'மனம்' தளர்ந்த விட்ட அம்மாணவர்களை... அம்மாணவ மணிகளை பெற்றவர்களும், உறவினர்களும், இச்சமுதாயமும் 'தன்பங்குக்கு'… அவர்களை ஒரு கிள்ளு கிரையாகத்தான், ஒரு அற்ப பிரவியாகத்தான் பார்க்கிறார்கள். ஏதோ 12 - ஆம் வகுப்பில் தவறி விட்டால், அவர்கள் 'தலையெழுத்து' முடிந்துவிட்டதாக எண்ணி... ஒன்று 'விட்டோடு கிட' அல்லது எங்கேயாவது / ஏதாவது பொழைப்பை பார்க்க (நகை கடைக்கு?) போ என்று விட்டு (துரத்தி?) விடுகின்றோம். ‘மறு வாய்ப்பு’ அளிக்கப் படாததினால் திசை மாறியப் பறவைக ளின் ‘மனக் குமுறல்கள்’ நம் காதில் விழாமல் இல்லை.
ஒரு முறை படிப்பில் தோற்றவர்களும், மறுமுறை தேர்ச்சி பெற்று 'சாதித்த' பல வரலாறுகள் இத்தரணியில் உண்டு. ஒரு தடவை தோற்று விட்டோம் என்றால்...வாழ்க்கை / படிப்பு அத்தோடு முடிந்து விட்டது அல்ல என்பதனை முதலில்
‘பெற்றவர்களுக்கும்’ பின்னர் 'அவர்களுக்கும்' உணர்த்தி இன்னொரு வாய்ப்பை நிச்சயம் வழங்க வேண்டும்.
இப்படியே பலவருடம் (?) பேசிக்கொண்டே இருப்பதினால் எவ்வித பலனுமில்லை... இதன் ‘விடியலை’ நோக்கி உடனே பயணிக்க வேண்டிய தருணம் இது.
நமதூரில் கடந்த 5 வருடத்தில் மட்டும், மொத்தம் 68 மாணவர்கள் 12 std - ல் 'பெயில்' ஆகி இருக்கிறார்கள். அதிக பட்சமாக கடைசியாக நடைபெற்ற (2011 ) தேர்வில் மட்டும், 24 பேர் தேர்ச்சி பெறாதவர்கள். 2011 - ல் பெயிலானவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 'டபுள்' ஆகியுள்ளது. இவர்களின் தற்போதைய நிலைமை என்ன...இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை முதலில் சேகரிக்க வேண்டும். தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி... இதில் தளர்ந்து போவதற்க்கு ஒன்றுமே இல்லை என்று அவர்களை ஊக்கபடுத்தி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி உதவிக்கரம் நீட்டி... அவர்கள் கோட்டை விட்ட பாடத்தை திரும்ப எழுத வைத்து அவர்களையும் ஒரு பொறியியல் வல்லுனர்களாகவோ அல்லது பட்டதாரிகளாகவோ நிச்சயம் உருவாக்க முடியும்!!
வெற்றி பெற்றவர்களுக்காக மடிக் கணினி, ஊக்கத்தொகை, ஹஜ்/உம்ரா என்று வாரி வழங்கும் அதே நேரத்தில். அப்பணத்தில் ஒரு சிறு பகுதியை 'இவர்கள்' மீதும் கொஞ்சம் அக்கறை எடுத்து செலவு செய்வோமேயானால் அவர்களுடைய வாழ்வும் மேம்படும்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross