இக்கட்டுரை ஒரு நல்லுபதேசம்............... posted byShameemul Islam SKS (Chennai)[18 April 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 21013
மூன்று நாள் தான் ஆகுது.
அந்த சீனப்பெண் வாடிப்போய் சென்னை மவுன்ட் ரோட்டில் நின்றிருந்தாள்.
அதற்கு கொஞ்சம் முன்பு வரை ஆவலுடன் அலைந்து கொண்டிருந்தார்.
எப்போது அவள் பணம் (ஒன்றரை லட்சம்) இவன் கைக்கு மாறியதோ அப்போது உடனுக்குடன் பையன் எஸ்கேப்.
என்னவென்று பார்த்தால் நெட் மூலம் இருவருக்கும் தொடர்பாம்.
காதலன் என்ற பெயரில் வெறும் கற்புக் கள்ளனாகத் தான் அந்த சீனப் பெண் முதலில் நினைத்திருப்பார்.
ஆனால் அவன் தன்னை நிற்கதியில் விட்டுவிட்ட ஒரு பொருள் திருடன் என்பதை உணர்ந்து கொண்ட அவள் தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து கையில் காசொன்றும் இல்லாமல் அலைவது தான் மிச்சம்.
முழுப்பூசணியை சோற்றில் மறைத்த கதை உங்களுக்குத் தெரியுமா.
நமது மாநிலத்தில் ஒரு ஊரில் ஒன்பது மாதமாக கள்ளத்தனமாக கற்பைச் சுமந்தவள் குழந்தைப் பெற்றெடுக்க வெளியில் வரும்போது தான் ஊர் மக்களுக்கே புரிந்தது, இல்லாத மாப்பிள்ளைக்கு (கல்யாணமாகாமலேயே) பிறக்கப் போகும் குழந்தை என.
என்னென்று பார்த்தால் பக்கத்து ஊரு பையன் செல்பேசி மூலம் கொண்ட தொடர்பால் உயர்வான கள்ளத்தொடர்பாம் அது.
இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் ஒரே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டப்பந்தயத்தில் அல்ல.
ஆணும் பெண்ணும் பூமியும் ஈர்ப்பு விசையும் போல.
ஆண் விசைகொண்டு பெண்ணை ஈர்ப்பவன். வெளியில் தெரியமாட்டான். ஆனால் பெண்ணோ பூமி போல ஈர்க்கப்படும் பொருள். இருவருமே சமூகத்தில் குற்றவாளிகள். அவளை சமூகம் தூற்றுகிறது. அவனோ அடையாளம் தெரியாமலேயே விட்டு விடப்படுகிறான்.
செல் ஒரு புதிய மார்க்கம். புதிய ஏற்பாடு.
தீனுல் இஸ்லாம் அல்ல இது.
பதின் பருவத்தின் கடைசியில் உள்ளவர்கள் பலர் இன்றைய காலத்தில் பாலியலின் உச்சத்தை அடைந்தே விடுகிறார்களாம். இது ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வு.
தீனுல் இஸ்லாத்தை முழுமையாக கற்றுச் செயல்படாதவர் "தீனுல் செல்லில்" எப்போது வேண்டுமானாலும் மாட்டிக்கொள்வார்.
ஏனெனில் அது சாத்தானின் ஓசை.
இப்போதெல்லாம் ஒடிப்போவதை துரத்தவென்றே ஒரு இளைஞர் கூட்டம். தடுத்து நிறுத்தவே.
அவர்களுக்கு நான் தொடர்ந்து சொல்வது சுழலும் மின்விசிறியை கையால் நிறுத்தினாலும் நிறுத்தலாம்.
ஆனால் கையை எடுத்து விட்டால் மீண்டும் சுற்றும்.
எனவே மின்விசிறியை நிறுத்த சுவிட்சை ஆஃப் செய்யுங்கள்.
அந்த சுவிட்ச் பைன்ட் தான் இறை அச்சம்.
ஈமானை ஊட்டுங்கள், இறை அச்சம் வளரும்.
நல்ல முன்மாதிரியை பெற்றவர்களே தாருங்கள்.
முன்பெல்லாம் தீமையை நாம் தான் துரத்திச் செல்ல வேண்டு இருந்தது. இப்போது அது நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது.
சாத்தான் என்றைக்குமே ஒரு வல்லரசு போல காட்சி தருவான்.
ஆனால் அவனின் நெற்றிப்பொட்டில் அறைந்து வீழ்த்த ஒரு ஈமானிய பலம் போதும். ஏனெனில் அது இறை பலம்.
இக்கட்டுரை ஒரு நல்லுபதேசம்.
தேவையான போதெல்லாம் நல்லுபதேசம் கூறுமாறு முஸ்லிம்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக தமீம் இப்னு அவ்ஸ் எடுத்துச் சொன்னார்கள்.
"சன்மார்க்கம் என்பது நேர்மையான ஆலோசனையாகும்" என நபியவர்கள் கூறினார்கள்.
"யாருக்கு?" என நாம் கேட்டோம்.
"அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவனுடைய வேதத்திற்கும், முஸ்லிம்களில் தலைவர்களுக்கும் அவர்களுடைய பொது ஜனங்களுக்கும்" என்றார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross