இழந்தோம் ஏகத்துவ சிற்பியை...! posted bySHUAIB (Jed.)[12 January 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2135
எஸ்.கே.எஸ்....
சாந்த முகத்திற்கு சொந்தமானவர், சிறந்த பிரச்சாரகர், ஆங்கில புலமை மிக்கவர், நாவன்மையாளர், தன்னலம் பாராது பொதுநல வாழ்வை தனதாக்கியவர், பிரச்சினைகளை மென்மையாக எதிர்கொள்பவர், புன்னகையோடு கோபிப்பவர், செய்திகளை ஆணித்தரமாக சுட்டுபவர், ஆக்ரோஷமாக அதேசமயம் ஆழமாக வாதிடுபவர், கருத்தை கருத்தால் மாயப்பவர், தொலை நோக்கு சிந்தனையாளர், எளிமையை விரும்பியவர், கஷ்டங்களை இன்முகத்தோடு ஏற்று இன்பம் கண்டவர் ....... இழந்துவிட்டோம் அந்த நல்ல மனிதரை...!
ஆரபகால ஏகத்துவவாதி, ஏகத்துவ சகாப்தம் நகரில் தழைத்தோங்க பெரிதும் பாடுபட்டவர், அல்லாஹ்வின் வேதத்தை அர்த்தம் அறிந்து விளக்கும் "குர்ஆன் வகுப்பு" க்களை நகரில் முதலில் ஏற்படுத்தி புரட்சி கண்டவர்..... இழந்து விட்டோம் அந்த ஏகத்துவ சிற்பியை...!
அவரது இழப்பு ஏகத்துவ குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு வெற்றிடம். அதனால் மறுமையில் அவருக்கு கிடைக்க பிரார்த்திப்போம் வெற்றி இடம்.
வல்ல ரஹ்மான் அன்னாரது பிழை, பவம் பொறுத்து, மறுமையில் "ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் அஃலா" என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள பிரார்த்திப்போம். அன்னாரது இழப்பால் துயரும் குடும்பத்தினருக்கு ரப்புல் ஆலமீன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross