இஸ்லாம் மார்க்கம் ஐந்து காரியம் கொண்டு எடுக்கப்பட்டது ஒன்னாவது கலிமா ஷஹாதத்து, இரண்டாவது தொழுகை மூன்றாவது ஜக்காத்து நான்காவது நோன்பு , ஐந்தாவது ஹஜ்ஜு ============
ஹஜ்ஜுக்குப்போக தக்க முதலும் சரீர பலமும் .ஏறிப்போக வாகனமும் , வழியில் பயமும் இல்லாதிருந்தால் மக்கத்துக்கு போய் ஹஜ் செய்ய கடனாய் இருக்கும்.
இதுவே ஒரு இஸ்லாத்தின் அடிப்படை. அஸ்திவாரமாய் உள்ள அக்கீதா கொளகை சம்மந்தப்பட்ட சுலோகமாய் இருககிறது. நமதூரில் ஐந்து வயதுக்கு முன்னாலிருந்தே குழநகளுக்கு சொல்லித்தந்து மனப் பாடமாக்கும் ஒரு அருமையான சுலோகம் ஆனால் இதில் ஒரு நுணுக்கம் என்னவென்றால், ஹஜ்ஜுக்குமட்டும் ஒரு சிறு விளக்கம் தரப்பட்டு இருக்கிறது.. அதிலும் தக்கமுதலும் என்பதில் பல வகைகளில் இன்னும் நீண்ட விளக்கம் ஆலிம் பெரு மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.. அவைகளில் ஒரு கருத்தாகிறது. நூறு விதத்திலும் ஹலாலான பொருளைகொண்டு செலவு செய்யவேண்டும். இதும் மிக முக்கியமான ஒன்றாகும். இது ஏன் இப்படி கூற வேண்டும் சிந்திக்க வேண்டியதுதான். வாழநாளில் ஒருதடவையே கடமை (ஃபற்ழ்)ஆகிய இந்த நீண்ட நெடிய ஐந்து நாள் தொடர்ந்து செய்யும் ஹஜ்ஜு வைத் தூய பொறுளைக் கொண்டு செய்ய வேண்டுமல்லவா? ஆம் சரிதான் கட்டாயம் செய்யத்தான் வேண்டும். 100க்கு 100ம் உண்மைதான். ஆனால் இது இக்காலத்தில் சாத்தியமில்லையே!!!!!!!!......... இது நம்மில் அனேகரின் கவலை.
ஆனால் மிகுந்த கஷ்ட்டத்தில் ஹலாலாகவும், சில நேரம் ஃகிலாஃபாகவும் சந்தேகமாகவு) ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஹறாமாகவும் பொருள்கள் சேர்ந்து விடுகிறதே? என்ன செய்ய என வழி தெரியாமல் விழித்துக்கொண்டே இருக்கும் ஒரு சில நஃபர்களுக்கு சில சட்ட நுணுக்கமான உலமாக்கள் கூறுகிறார்கல் நீங்கள்கள் பொருள்களை தேடும் முன்பு ஹலாலாக தேடும் வழியை மட்டும் தேர்வு செய்யுங்கள் என்று. இப்படி செய்யும் சமயம் பிரித்து, பிரித்து சேர்ர்க்கும் வகை தெரிந்து சிலர் உலகில் பல நாடுகளில் சேர்த்து அந்தந்த வகை களில் சிலவும் செய் கிறார்கள் ஏனெனில் அல்லாஹ் திருக்குற் ஆனில் ஆரம்பமாகவே கூறிவிட்டான்
2:3 الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
நாம் அவர்களுக்கு அளித்த வற்றிலிருந்து செலவு செவார்களென கூறிய இறைவன்
“நீங்கள் தேடிக்கொண்ட பொருள், உங்களுடய பொறுள் “ என்ரெல்லாம் கூறுகின்றான். அவன் தருவது ஹறாமில் தருவது என்று கூற முடயாது நாம் தான் மற்ற வழிகளில் தேடுகின்றோம் என்பதனையும் விளக்கம் தெரிந்த உலமாக்களிடமும், அவட்களைச் சார்ந்த கிதாபு களையும் பார்த்து பலன் பெறுவோமாக .ஆமீன்.
இண்டெர் நெட்டுக்கு தகவல் :தைக்கா றஹ்மத்துல்லாஹ்.59-தீவுத்தெரு காயல்பட்னம். ஃபோன் 04639-280852.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross