ஊளையிடும் 'ஓநாய்' கூட்டத்திற்கு மத்தியில்... ஒரு வெள்ளாடு !! posted bySalai.Mohamed Mohideen (USA)[03 September 2012] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 21747
போட்டியிட்டு வெற்றி பெறும்வரை 'அன்று' தேவைப்பட்ட இதே ஊடகங்கள் (குறிப்பாக ஒரு ஊடகம்) இன்று அவர்களை 'கொதிநிலைக்கு' தள்ளியிருக்கிறதென்றால்... இவர்களின் 'உண்மையான முகங்கள்' விடியோ வாயிலாக பொதுமக்களுக்கு தெரிந்து விடக்கூடாது மற்றும் இவர்களை 'ஆட்டு' விக்கும் 'சக்தி'க்கும் அந்த குறிப்பிட்ட இணைய தளத்திற்க்கும் ஏதோ ஒரு பிணக்கு ஏற்பட்டு... அந்த இணைய தளத்தை கருவருப்பதட்க்கு மறைமுகமாக இந்த ஊடக சுதந்திரத்தை ஆயுதமாக எடுக்க, இவர்களுக்கு மாதப் படியளப்பவர்கள் (?) உத்தரவு பிறப்பித்ததது போல தெரிகின்றது.
ஒரே கல்லில்... இரண்டு மாங்காய். வெளிப்படை நிர்வாகத்தில் ஊழலை அறவே ஒளித்து வளமான காயலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கும் தலைவியையும் & மக்களை விழிப்புனர்வடைய செய்யும் அந்த இணையதளத்தையும் காலி பண்ணும் திட்டம்???
" உள்ளே வாருங்கள் என்று கையால் - வாயால் அவர்களை அழைத்ததை " - இவர்கள் திட்டமிட்டு 'மற்ற ஊடகங்களை' அழைத்ததின் ரகசியம், இந்த நகர்மன்ற பிரச்சனையை ஊதி பெரிதாக்கி 'செயலற்ற அல்லது கவுன்சிலர்களின் நம்பிக்கையை இழந்து விட்ட தலைவி' என்ற ஒரு மாயையை உருவாக்கும் எண்ணம்???
"தலைவியோடு வெளிநாட்டு காயலர்களையும், " - தெரியாமல் விடியோவில்
அவ்வார்த்தையை கேட்க்கும் சூழல். நா - காது கூசும் வார்த்தைகள். உங்களுடைய பொன்னான விடுமுறை நேரத்தையும் உங்களின் சுய கவுரவ/ கண்ணியத்தையும் பொருட்படுத்தாது இவர்களை எல்லாம் 'மனிதர்களாக' மதித்து பெருநாள் ஒன்று கூடல் மற்றும் நகர்மன்ற பிரச்சனையை தீர்ப்பதற்க்காக அழைத்ததட்க்கு செருப்பால் அடித்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது.
" ஊளையிடும் 'ஓநாய்' கூட்டத்திற்கு மத்தியில் " - மிகக் காட்டமான வார்த்தைகள். இவர்களை விட ஒரு சில அரசியல் 'சாக்கடைகள்' எவ்வளவோ மேல் என்பதனை உணர நமக்கு இவ்வளவு காலம் ???
"நாம் எங்கு வாழ்ந்தாலும் ஒருநாள் இம்மண்ணுக்குத் திரும்பியே ஆக வேண்டும்." -- ஆயிரம் முறை சொன்னாலும் சிலரிடம் எடுபடாத வாசகங்கள் !!
"ஆட்டுவிப்பவர்கள் ஆட்டுவித்தால் ஆடாதவரும் உண்டோ? " -- மிகச்சரியாக சொல்லப் பட்ட வார்த்தை. நகரமன்ற பிரச்சனைக்கு 'விடையை' அறிந்து கொண்டு... நாம் ஒவ்வொருவரும் கண்ணா மூச்சியாடுகிறோம். ஆட்டு விக்கும் அந்த சக்தியை எதிர் கொள்ள திராணியில்லை என்பதே ஒருவரி பதில்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross