Re:... posted bySalai Sheikh Saleem (Dubai)[22 October 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22972
திரு சுடலை அவர்கள் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே எல்கே பள்ளிக்கு பழைய non teaching staff ஆவார். அப்போது எல்கே அப்பாவிற்கு மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களில் இவரும் ஒருவர். சம்பளத்திற்கு மட்டுமே பணியாற்றாமல் உளமார ஒரு கல்வி சேவை நிறுவனத்திற்கு தொண்டாற்றியவர். நாங்கள் அவருக்கு கொடுத்த தொல்லைகள் தான் எத்தனை எத்தனை!!!
அப்போது எல்கே பள்ளியில் தான் ஊரின் சங்கு அமைக்கப்பட்டிருந்தது மேலும் திரு சுடலைதான் பொறுப்பாளர். சங்கு ஒரு நாளைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஊதப்பட வேண்டும். ஆனால் அவர் இல்லாத சமயம் பார்த்து நங்கள் எங்கள் கைங்கரியங்களை பலதடவைகள் காட்டி வழமைக்கு மாறான நேரங்களில் சங்கை இயக்கி ஊரையே கலக்கி இருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் தனது கனத்த உடலை தூக்கிக்கொண்டு எங்கிருந்தாலும் இளைக்க இழக்க ஓடோடி வந்து சங்கை செயலிழக்க வைப்பதை நாங்கள் ஒளிந்திருந்து பார்த்து சந்தோசப்பட்ட அந்த தருணங்கள் என் மனதில் இப்போதும் திரைப்படமாய் ஓடுகிறது.
நாங்கள் SSLC படிக்கும் போது இரவுப்பாடம் சரியாக படிக்கிறோமா என்று வேவு பார்க்க வருவார். பல சமயங்களில் நாங்கள் செய்த சேஷ்டைகளை மர்ஹூம் எல்கே அப்பாவிடம் சொல்வதாக மிரட்டி சொல்லவும் மாட்டார். காரணம் எல்கே அப்பா தங்களது பிரம்பால் எங்களை சாத்தி விடுவார்கள் என்பதால். இதை அவரே பலதடவை எங்களிடம் சொல்லியும் இருக்கிறார்.
நல்ல மனிதர், நல்ல பல குணங்களுக்கு சொந்தக்காரர். எல்கே பள்ளியின் சொத்துகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்களுக்கு என் குடும்பத்தின் சார்பில் இரங்கல்களை இதன் மூலம் பதிவுசெய்கிறேன்.
அன்னாரின் குடும்பத்திற்கு பள்ளியின் மூலமோ அல்லது தனிப்பட்ட முறையிலோ யாரும் உதவுவதாக இருந்தால் தயவு செய்து என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross