The power of Knowledge & love posted byS.A.C.Hameed, Gen.Sec'y AIMAN (Abu Dhabi)[15 January 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2300
வருடம் 1995. பெருநாளைக்காக முத்துநகர் மூலம் ஊர் திரும்ப ஏராளமான மத்திய காயல் சகோதரர்களோடு ரயிலில் ஒவ்வொரு கோச்சாக தாண்டி எங்களது இருப்பிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தோம். திடீரென்று எங்கிருந்தோ ஒலித்தது அந்த குரல்.
"அடே மகனே!What an auspicious day! Come let us spend our time together today" என்று அவருக்கே உரிய நுனி நாக்கு ஆங்கிலத்தில் அழைத்தார் அங்கே நம் பிரியமுள்ள எஸ்கே மாமா. இதோ என் பெட்டியை வைத்து விட்டு வந்து விடுகிறேன் என்று தான் கூறினேன்.
அவ்வளவு தான், என் உடனிருந்த நண்பர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. "ஹமீத்! இந்த ஆளு பேரெல்லாம் தெரியாது! ஆனா அவர் கொடிய சிம்! உம்மாடி நம்ம நம்ம ஈமான நாம தான் காப்பாத்திக்கணும் வாப்பா! ஹமீது ஒண்ணு எங்களோடு இரு. அல்லது அந்த ஆளோட போ. உன்னிஷ்டம். நாங்க அந்த பக்கமே வர மாட்டோம்" என கோபகமாக எச்சரித்தனர் என் நண்பர்கள்.
நானும் பதிலுக்கு "அவர பத்தி எதுவும் தெரியாம இவ்வளவு நீங்களெல்லாம் பேசுரது மிகத் தவறு. ஆனா நான் போறது போறதுதான். என்னை யாரும் தடுக்க முடியாது": என கூறி விட்டு எஸ்கே அவர்கள் இருந்த பெட்டிக்கு வந்து விட்டேன்.
இடையில், இவனுங்க என்ன பேசுரானுங்க என்று வேவு பார்க்க, என் மீது சற்று கோபத்துடன் வந்தனர் என் நண்பர்கள். ஆரம்பத்தில் சற்று கிண்டலாக பேச ஆரம்பித்தனர் என் நண்பர்கள். நிமிடங்கள் செல்லச் செல்ல அவர்களது கோபம், எஸ்கே மாமாவின் ஆழ்ந்த ஞானத்தின் மீது காதலாக சிறிது சிறிதாக மலர்ந்தது.
இஃப்தார் நேரம் குறுக்கிட்டது. மாலை நாலரை மணிக்கு எஸ்கே மீது விரோதம் காட்டிய எனது நண்பர்கள், ஆறு மணிக்கெல்லாம் அந்த விந்தை மனிதரின் நண்பர்களாகி, மத்திய காயல் பகுதிக்கே உரித்தான உயரிய விருந்தோம்பலின் நிழலில், அவர்களின் களங்கமற்ற அன்பில் எஸ்கே திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்.
நோன்பு திறப்பதர்காக எதுவும் கொண்டு வராத எஸ்கே அவர்களைச் சுற்றி மத்திய காயல் சகோத்ரார்கள் வித விதமான பதார்த்தங்களை பரப்பி எஸ்கேயை திக்குமுக்காடச் செய்தனர்.
நாலரை மணிக்கு இவரை பார்த்தாலே பாவம் என்றிருந்த நிலைமை போய், எஸ்கே மாமா, என்றும், காக்கா என்றும், மச்சான் என்றும் முறை கொண்டாடச் செய்தது எஸ்கேயின் ஆற்றல். இரவு 10 மணி நிலவரமோ வேறு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross