ஆரோக்கியத்துடன் இருந்த மனிதர் திடீரென மரணமாகி விட்டார்.............. posted byS.K.Shameemul Islam (Chennai)[30 October 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 23290
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நேற்று IIM உள்ஹிய்யா பணிகளில் பங்கேற்று விட்டு குட்டியாப்பள்ளியிலிருந்து திரும்பும்போது காலை 10.15 மணிக்கு மரணச்செய்தி கிடைத்தது. வீடு சென்றதும் அல் அமீன் பள்ளியில் பயின்று வரும் என் மருமக்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டு விட்டதாகக் கூறி 'செய்துல்லாஹ் சார் மவுத்தாயிட்டாங்க' னு காரணத்தையும் சொன்னார்கள்.
'ரெம்ப நல்ல சாருங்கோ' என்றாள் மூன்றாம் வகுப்பில் படிக்கும் என் மருமகள். அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுக்க துஆ செய்யுங்கள் என்றேன் நான். என் தாயார் ' அந்த ஸ்கூலை நன்றாக உருவாக்கி கட்டிக் காத்தார்; இனி இதர நிர்வாகிகள் அப்பணியை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும்' என ஆதங்கப்பட்டார்கள். அவரைப்போல நிர்வாகத்தில் உள்ள பிறருக்கு அந்த பொறுப்பை அல்லாஹ் உணர்த்துவான், அவர்கள் முன்வருவார்கள் என்றேன்.
எல்.கே. மேனிலைப்பள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர்களுள் இவரும் ஒரு மாணிக்கம்.
மாணவர்களின் வளர்ச்சிக்காக அரும்பாடு படுவார்.
நல்லொழுக்கத்தை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்து விளங்கி தாமே ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். தமது சொந்த பிள்ளைகளையும் அதுபோலவே உருவாக்கினார்.
மார்க்கத்தைப் பேணுவதிலும் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுவதிலும் எப்போதுமே குறிப்பாக இருப்பார்.
சுகம் விசாரிப்பதிலும் இவர் விசாரிப்பில் ஒரு தனி அழகுண்டு.
என் தந்தை எஸ்.கே. அவர்களுக்கு மிகவும் பிடித்தமான என் ஆசான்களுள் ஒருவர்.
நேற்று சென்னைக்குப் புறப்படும் முன் அவரது உடலை அவரின் வீட்டில் சென்று பார்த்தேன்.
எப்போதும் போல சாந்தமான முகமாகவே எனக்கு அது தென்பட்டது. (அல்லாஹ் மிக அறிந்தவன்). அழுது கொண்டிருந்த அவரது குடும்பத்தவருக்கு ஆறுதல் கூறி வந்தேன்.
ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததாகவும் திருநெல்வேலியில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் வைத்து பரிசோதித்ததாகவும் எல்லாமே நன்றாகி காய்ச்சல் மட்டும் நிற்காததால் நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாகவும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் கூறினார்.
ஒருவரின் முடிவுக்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் அவ்வளவுதான். மொத்தத்தில் ஆரோக்கியத்துடன் இருந்த மனிதர் திடீரென மரணமாகி விட்டார்.
வல்ல ரஹ்மான் அவரது பிழைகளைப் பொறுத்து பாவங்கள் அனைத்தையும் மன்னித்து மண்ணறையிலும் மறுமையிலும் உயர்பதவியைக் கொடுத்தருள்வானாக. சுவர்க்கத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸில் அ'லாவில் சேர்த்தருள்வானாக. ஆமீன்.
கவலையுடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
மற்றும் குடும்பத்தினர்,
காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross