நெஞ்சு பொறுக்குதில்லையே....? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[03 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23411
கோகுல் எர்த்லெ போய் சாட்லைட் பிக்ச்சரில் காயல்பட்டினத்தைப் பார்த்தேன். அடப்பாவிகளா அநியாயத்துக்கு DCW வின் கழிவு நமதூர்கடலில் கலக்கும் காட்சி என் மனதை உலுக்கியது.
செங்கல் நிறத்தில் ஒரு ஆறு போன்று அது நம் கடலில் கலக்கின்றது. இக்கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு விடிவு காலமே வராதா?
ப்ளீஸ் அந்த சாட்லைட் படத்தை டவுன்லோட் செய்து இத்தளத்தில் போடவும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வர ஒரு காரணியாக அமையும்.
சகோதரர் திரு பார்த்திபன் அவர்களது கருத்து முற்றிலும் உண்மையே! நமதூர் மக்கள் மீது அவர் வைத்துள்ள மரியாதைக்கும் பாசத்திற்கும் என் உளம் கனிந்த நன்றி...! போர்க்கால அடிப்படையில் இந்த ஆலைக்கு எதிராக நாம் நம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராட முனைய வேண்டும். பொறுத்தது போதும்! இனி பொங்கி எழுவதுதான் புத்தி!
காயலர் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது இணைய தளம் இதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி செயல்பட வேண்டிய காலத்தின் கட்டாயமும், கடமையும் உள்ளது. இனியும் நம் மக்களை இந்த ஆலை அரக்கனுக்கு காவுகொடுக்கக் கூடாது.
ஊரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நம் முன்னோர்கள் இரயில் நிலையம், பிரேத பரிசோதனைக்கூடம், திரையரங்கம், காவல்நிலையம் ஆகியவற்றை ஊர் எல்லைக்கு அப்பால் தடுத்து நிறுத்தி வைத்தனர். ஆனால் இந்த உயிர்க்கொல்லி ஆலையின் உத்வேகம் தெரியாமல் இடம் கொடுத்த சிறு தவறுதான் இன்று, மாபெரும் அச்சுறுத்தலாக நம் மக்களுக்கு தீரத தலைவலியை உண்டாக்கி வருகின்றது. நாளுக்கு நாள் அதன் பரப்பளவும், உற்பத்தியும் அதிகரித்து வருகின்றதே ஒழிய சனியன் விட்டுத் தொலைந்த பாடில்லை!
மகாராஷ்ட்ரா பணம் காய்ச்சி மரம் இன்று வேர் பிடித்து விஷ விருட்சமாக வளர்ந்து நம்மைக் கொல்கின்றது. சத்தமின்றி ஓர் கூடங்குளம் சாகுபுரத்தில் உருவாகி வருவதை யாராலும் மறுக்க இயலாது. இனி காயல்பட்டினமும் ஓர் இடிந்தகரையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross