Re:...மண்ணின் மன்னன்... posted bymackie noohuthambi (kayalpatnam)[18 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23910
ஷாஹ் ஜஹான்.. மண்ணின் மன்னன்..... ஆம் இந்த பெயரை தமிழ் அகராதி இப்படிதான் மொழியாக்கம் செய்கிறது.
கட்டுரையை படிக்கவும் அதை உள்வாங்கவும் எடுக்கும் நேரம் மின் வெட்டு வந்து தடை செய்கிறது. வைராக்கியத்துடன் படித்து முடித்தபோது ஒரு செய்தி விளங்குகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களுடன் தொடர்பு இருந்ததாலோ என்னவோ அவருடைய பழக்க தோஷம் உங்களையும் ஒட்டிக்கொண்டது.
அண்ணா அவர்களை ஒரு கூட்டத்தில் பேச சொன்னார்கள். அவரும் ஒப்புக்கொண்டு, என்ன தலைப்பு என்று கேட்டார். தலைப்பு இல்லை நீங்கள் பேசினால் போதும் என்றார்கள். அண்ணா பேச ஆரம்பித்தார். நேரம் ஆக ஆக கூடியிருந்த கூட்டம் கலையவில்லை ஆனால் முகம் சுளித்தது. எவ்வளவு அழகாக பேசினாலும் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாரே என்று நினைத்தார்கள். பேரறிஞர் அல்லவா அண்ணா... மக்களின் முகபாவங்களை பார்த்தார். அவர் தொடர்ந்தார். நான் என்ன இப்படி சம்பந்தம் இல்லாமல் பேசுகிறேன் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நானும் அப்படித்தான் சம்பந்தமில்லாமல் பேசுகிறேன். ஏனென்றான் எனக்கு பேச தரப்பட்ட தலைப்பு "தலைப்பு இல்லை" என்ற தலைப்புதான். எனவேதான் நான் இப்படி பேசுகிறேன். இந்த நாட்டின் ஆட்சியே தலைப்பில்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னார். மக்கள் சிரிக்க ஆரம்பித்ததும் தனது பொடி டப்பாவை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சிக்கொண்டு பேச்சை தொடர்ந்தார், ஒரு லெவெலுக்கு வந்தது.
இதேபோல்தான் போய் வருகிறேன் என்று ஆரம்பித்து இந்த மண்ணின் மடியில் உறங்க வருகிறேன் என்று முடித்து இருக்கிறீர்கள். பாராளுமன்றம். சட்டமன்றம், நகர்மன்றம் இந்த மூன்று மன்றங்களின் பெரிய தலைவர்களுடன் இருந்த தொடர்பு, உங்களை தேடி வந்த பதவிகள், அவற்றை எல்லாம் நீங்கள் உதறி தள்ளிவிட்டு சென்ற பெருந்தன்மை எல்லாம் வெளிச்சதுக்கு வந்துள்ளன.
ஒரு வேதனையான பிரியாவிடைதான். புரியாத பிரியம் பிரியும்போது புரியும்! ஆனால் இத்தனையும் எழுதிவிட்டு மீண்டும் உறங்கத்தான் இந்த மண்ணுக்கு நீங்கள் வருவீர்கள் என்றால்...... மன்னிக்க வேண்டும்.... நீங்கள் இதுவரை செய்த தவறையே தொடர்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கட்டுரைகளால் ஈர்க்கப்படும் கவிமகன் மைந்தன் போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கு கிரியா ஊக்கியாக இருக்க வேண்டிய நீங்கள், ஊக்க மருந்தாக இருக்க வேண்டிய நீங்கள், மீண்டும் ஒரு தூக்க மருந்தாக இருக்க முனைவதை என்போன்றவர்கள் ஏற்க முடியவில்லை. ஜீரணிக்க முடியவில்லை.
நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மகால் கட்டவேண்டாம். மன்னர் ஷா ஜஹான் அவர்களே... நான் வாழும்போது எனக்கு வசதியாக குடியிருக்க ஒரு குடிசை கட்டி தாருங்கள் என்று ஷா ஜகானைபார்த்து ஒரு ஏழை கேட்பதாக ஒரு புது கவிதை கூறுகிறது. நீங்களும் ஒரு ஷா ஜகான் என்பதால் காயல்பட்டினத்தில் உள்ள எண்ணற்ற ஏழைகள் உங்களிடம் அந்த கேள்வியை கேட்கிறார்கள்... அடிக்கடி ஊருக்கு வாருங்கள். இணைய தளத்தில் அல்ல, நேரில் வாருங்கள்,, உங்கள் உதவிகளை அள்ளி தாருங்கள்.. ஏழைகளின் இதய சிம்மாசனங்களில் குடியிருங்கள்... அதுவே நிலையான சிம்மாசனம். ஏனெனில்ஷா ஜஹான் தாஜ் மஹால் கட்டியபிறகு ஆட்சி பொறுப்பேற்ற அவரது மகன் அவரை சிறைபிடித்து வைத்தார் என்ற சரித்திரமும் என் கண்முன் வந்து விரிகிறது.
உலகில் எதுவும் நிலையானதல்ல மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
பிறருக்காக கண்ணீரும் ஏழைக்காக செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன்....மனிதன்.....மனிதன்.
HE ALONE LIVES FOR OTHERS , OTHERS ARE MORE DEAD THAN ALIVE
வாழ்த்துக்கள்.....சென்று வாருங்கள் மீண்டும் சந்திப்போம். பயணங்கள் முடிவதில்லை....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross