உயிரை உறிஞ்சும் DCW ஆலை........... posted byNIZAR AL (kayalpatnam)[28 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24170
DCW வை எதிர்த்து KEPA வின் கடைஅடைப்பு,
ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் ஒட்டு மொத்த ஊரு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்ததை காணமுடிகிறது. இதற்காக சொந்த வேலைகளை ஒதுக்கி களப்பணியாற்றும் கண்ணியமிகு சகோதரர்களுக்கு நன்றிகள்.
ஊரின் அனைவரும் இந்த விசயத்தில் ஓரணியில் ஒற்றுமையாக நிற்பதும், களப்பணி ஆற்றுவதும், ஒத்துழைப்பு அளிப்பதும், ஊரு மக்களிடையே வெற்றி காற்று வீசுவதனால் கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
குஜராத்தில் இருந்து வந்து கோடி கோடியா, பணம் அடித்தாலும் பரவாஇல்லை, ஆனால் விலை மதிக்க முடியாத நம் மக்களின் உயிரை அல்லவா காவு வாங்குகிறார்கள்.
எத்தனை இளைய சகோதர-சகோதரிகளை இழந்துள்ளோம்?
நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.
தன் ஆலையின் மாசு மற்றும் கழிவுகளை மொத்தமாக நம் பக்கமே திருப்பிகிற இந்த கொடியவர்களை மத்திய, மாநில அரசுகளின் மாசு கட்டுபாட்டு வாரியம் அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என்றால் ஆலையின் கரன்சிகளால் அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது தெளிவாகின்றது.
எப்படியோ ஊரு மக்களின் இந்த முதல் முயற்சி நாம் எதிர்பார்க்கும் வெற்றிக்கு வித்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.இறைவன் நம் முயற்சிகளை வெற்றி ஆக்குவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross