அண்னல் நபிகளார் ஒரு அழகிய முன் மாதிரி....! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[04 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24360
ஒரு மனிதனின் இறுதிப்பயணம், ஈமச்சடங்கு இவற்றை நிறைவேற்ற சடலத்தையும் சுமந்து கொண்டு கல்,முள் நிறைந்த பாதையில் செல்வது மனதுக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கின்றது.
மாநபிகள் பெருமான் முஹம்மது அவர்களின் தோழர்கள் வீற்றிருக்கும் சபைக்கு அந்த மாபெரும் மனிதகுல மாணிக்கம் வரும் போது மரியாதை நிமித்தம் எழுந்து நிற்கும் தோழர்களை ” “வேண்டாம்... தாங்கள் யாருக்காவும் எழுந்திருக்க வேண்டாம்! அதை நான் விரும்பவில்லை” என சமத்துவம் காத்த எங்கள் நபிகள் பெருமான் ஒரு மய்யத்து (சடலம்) போகும் போது தாங்களே எழுந்து நின்று மரியாதை செய்த மகத்துவம் தனை இன்று நான் நினைவு கூர்கின்றேன். மதம் என்றோ? இனம் என்றோ? பாராமல் அனைத்து மய்யத்து (சடலங்) களுக்கும் கண்ணியம் செய்த அந்த மாமனிதரின் வழித்தோன்றல்கள் நாம். எனவே,
தமிழன் முத்து இஸ்மாயீல் கூறியது போல நம் சகோதர சமுதாய மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமையும் முயற்சியும் அளிக்க கடமைபட்டுள்ளோம்.
07ஆவது வார்டு உறுப்பினர் சாச்சா அந்தோனியார் அவர்களே!
உங்கள் மீது நம்பிக்கை வைத்து தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி வாக்குச்சாவடி வரை சென்று உங்களுக்காக வாக்களித்து வெற்றிபெறச் செய்த உங்கள் பகுதியிலுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் தாங்கள் இன்னும் பல நன்மைகள் செய்து நற்பெயர் பெற்று நலமோடு பணியாற்ற வாழ்த்துகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross