Re:...எங்கள் குடும்ப சகோதரர்கள்,சகோதரிகள் பாதிப்புக்குள்ளானது posted byOMER ANAS (DOHA QATAR.)[06 December 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24389
முதலில் இந்த ஆளையினை,அதன் அடிப்படை நாசக்கார சக்தியினை வேரோடு பிடுங்கி எரிய எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும்,என்றும் பின் வாங்கிட நினைக்காத அனைத்து நல் உள்ளங்களுக்கும்,உண்மையினைஉள்ளபடி வெளியிட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி!
இந்த கொடிய ஆலையாலோ என்னவோ என் அன்பிற்கு உரிய சகோதரனை என் குடும்பம் இழந்துள்ளது.அந்த வலி இன்னும் எங்களை வாட்டி எடுக்கிறது!
ஒரு தீய செயலும் அவரிடம் இல்லாத போதும்,ஊரே அவரைபற்றி மெச்சிய போதும் அவர் மரணம் அடைந்த செய்தி மட்டுமே எங்களுக்கு அன்று கிடைத்ததே தவிர இந்த ஆட்கொல்லி நோயால்தான் மரணம் ஏற்ப்பட்டது என்பது கூட பிற்காலத்தில்தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.
இதுபோல் எத்துனையோ நம் சகோதர சகோதரிகளை நாம் இழந்துள்ளோம்........!இனியும், இரத்தத்தால் ஒன்றுபட்ட நம் மாவட்ட அனைத்து மக்களையும் நாம் நாளை இழக்கும் முன்,மார்க்கம் அரசியல் சாதி மதம் இதுகளையெல்லாம் பாராமல் நாம் ஒன்று பட்டோமேயானால் நேற்றைய எகிப்து போல் நாளை நம் மாவட்டம் நிச்சயம் நல்லபடி நமக்கு கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross