இந்நேரத்தில் தாங்கள் DCW அருகில் உள்ள நீரோடையை கண்காணியுங்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[07 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24408
தொடர்மழை காரணமாக நகரெங்கும் அனைவரும் விரும்பும் வகையில் இதமான குளிர்ந்த காற்று சுகமான வானிலையில் நகர் மக்கள் அனைவர்களும் அனுபவித்த வண்ணம் உள்ளார்கள் - ஆனாலும் சிறு அச்சத்துடனே இருக்கிறார்கள்..! இந்த மாதிரி மழை நேரங்களில் அருகில் உள்ள DCW தொழிற்சாலையில் இருந்து கொடிய விசத்தன்மை வாய்ந்த அமில கழிவுகளை நீரோடையின் வழியாக நமது கடற்கரையில் திரும்பவும் கலக்க செய்து விடுவார்களோ...! என்ற அச்சம் மாலை நேரங்களில் கடற்கரை ஓரத்தில் கடல் நீரில் சிறுவர்களுடன் கால் நனைத்து விளையாடும் பெற்றோர்களுக்கும் மீனவ சகோதரர்களுக்கும் பெரும் அச்சமாகவே இருந்து வருகிறது...!
பல நபர்களுக்கு இந்த DCW அமில கழிவு நீரால் புற்று நோயும் தோல் வியாதியும் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.... இதற்காகவே நகரில் பெரும் ஆர்பாட்டமும் நடந்தது..
மாசுகட்டுப்பாடு வாரியமே...! சிறிய வேண்டுகோள்...! இந்நேரத்தில் தாங்கள் DCW அருகில் உள்ள நீரோடையை கண்காணியுங்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross