Re:...வபாத் அறிவிப்பில் மாற்றங்கள் தேவை posted bymackie noohuthambi (kayalpatnam)[18 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25084
எங்கள் இதயம் நிறைந்த எல்லோராலும் பாராட்டப்படுகின்ற குணங்கள் அமைந்த புகாரி மச்சான் அவர்கள் வபாத் செய்தி அறிந்து இணையதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவிதுக்கொண்டுள்ள நல இதயங்களுக்கும் பெருவாரியாக அவர்கள் ஜனாஸாவில் கலந்து தொழுது அவர்கள் மகுபிரதுக்காகவும் சுவர்க்க வாழ்வுக்காகவும் து ஆ செய்த எல்லா சகோதரர்களுக்கும் எங்கள் குடும்பத்தாரின் மக்கி புகாரி அவர்களின் குடுமபதாரினதும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். கூடியிருந்த கூட்டமே மர்ஹூம் அவர்களை சொர்க்கவாசியாக அடையாளம் காட்டியது அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் கபூல் செய்வானாக.
ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்கள் பதிவு செய்திருந்த ஒரு செய்தியும் இங்கு கூர்ந்து கவனிக்க தக்கது. மரண அறிவித்தல் என்று சொல்கிறார்கள். அதை இஸ்லாமிய பாஷையில் சொல்வது வபாத் அறிவித்தல் ஜனாஸா அறிவித்தல், மையவாடி என்று சொல்வதை மக்பரா என்று மாற்றி சொல்லலாம். அறிவிப்பின் முடிவில் து ஆவுடன் முடிப்பதும் மனதுக்கு நிம்மதி தருவதாகவே அமையும் என்று நினைக்கிறேன்.
காலம் காலமாக நாம் மரண அறிவித்தல் என்று சொல்வதை இப்போது மாற்ற வேண்டுமா இறுதியில் து ஆவுடன் முடிக்க வேண்டுமா, மைய வாடி என்று சொல்வதை மாற்றி மக்பரா என்று சொல்ல வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு நமது உலமாக்கள் இப்படி சொல்வது சிறப்பானதுதான் என்று சொன்னால் பொது மக்கள் அவற்றை மாற்றி சொல்வார்கள். நல்ல விஷயங்கள் யார் சொன்னாலும் அதை கருத்தின் கொள்வது நல்லதுதானே, யோசிப்போம் உலமாக்கள் அதை இதுபோன்ற மையித்து நல்லடக்க நேரத்தில் மக்களுக்கு சொன்னால் இன்னும் சால சிறந்தது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross