Re:... posted bySalai Sheikh Saleem (Dubai)[18 January 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25087
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
மக்கி புஹாரி காக்காவின் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தோம்.
முகம் மட்டும் அல்ல உள்ளமும் குழந்தை, எப்போதும் நகைச்சுவை பேச்சு, உதவும் மனப்பான்மை என என் அருமை (நண்பர்) காக்கா அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் சவுதியில் பணியாற்றும் போது புஹாரி காக்கவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவன். அவர்கள் சவுதியை விட்டு ஊரில் இருந்த காலங்களில் நான் ஒவ்வொரு சபரிலும் என்னிடம் நெருங்கி வந்து என் நலம் விசாரிப்பதோடு எனக்கு நல்ல பல அறிவுரைகள் தந்த நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை அங்கீகரித்தும், அவர்களது பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியில் நுழைந்திடச் செய்வானாக என பிரார்த்திக்கிறோம்.
மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் எனதன்பு சொந்தக்களுக்கும், மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இப்பேரிழப்பை பொருந்திக்கொள்ளக்கூடிய மேலான பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுப்பானாக - ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross