ஹமீத் மாமாவின் வஃபாத் செய்தி எங்களை ஆழ்ந்த துயரில் விட்டுச்சென்றுள்ளது...... posted byS.K.Shameemul Islam (Chennai)[19 January 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25111
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
சாவன்னா ஹாஃபிஸா என்ற ஷாஹுல் ஹமீத் மாமாவின் வஃபாத் செய்தி எங்களை ஆழ்ந்த துயரில் விட்டுச்சென்றுள்ளது.
சூது வாது இல்லாதவர். இறைவன் தொடர்பையே சதாவும் கொண்டிருந்தவர். குடும்பத்தில் உறுப்பினர் என்ற அடிப்படையில் காணும்போது ஸலாமுடன் விசாரிப்பதோடு சரி. ஏனைய நேரத் தொடர்புகள் யாவும் அல்லாஹ்வின் கலாமோடு மட்டும் தான் இவர்களுக்கிருந்தது.
என் நண்பன் பதவி ஓதி முடித்த நாள் முதல் அவனைத் திரும்பத் திரும்ப ஓதக் கேட்டு திருத்திக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
என் பள்ளிப்பருவம் அது. குருவித்துரைப் பள்ளியில் இஷா தொழச் செல்லும்போது அங்குள்ள மையவாடியை கடந்து செல்ல ஒரே பயமாக இருக்கும். அப்போது பல்பு லைட்டு தான். எங்கோ ஒரு இடத்தில் மட்டும் குழல் விளக்கு. திடீரென ஒரு நாள் ஒரு உருவத்தை மையவாடியின் திட்டில் பார்த்ததும் திடுக்குற்றேன். உடனே அவர்கள் சலாம் கூறி தாம்தான் என்பதை உணர்ந்த பிறகே அமைதி பெற்றேன். அப்போதும் வாயில் முணுமுணுத்த படி ஓதிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஈன்ற பிள்ளைகளும் ஒவ்வொன்றும் முத்துக்கள்.
அவரது பிள்ளைகளில் ஒருவரான உமர் காகா என்றோ மவுத்தாகி விட்டார்கள். ஆனால் இன்றும் என் நினைவில் உள்ளார்கள். எங்கள் மீது காட்டிய பாசம் இன்றும் எண்களின் நெஞ்சில் நீங்கா இடத்தில் நிலைபெற்று விட்டார்கள். மர்ஹூம் அவர்கள் மனைவியார் அவர்களும் அனைவர் மீதும் பாசத்தை கொட்டியதில் மற்றவர்க்கு சளைத்தவர்கள் இல்லை.
அந்தோ, நல்லவர்கள் நம்மை விட்டு காலியாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இடம் வெறும் வெற்றிடமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அல்லாஹ் தான் நம்மில் சிலரைக்கொண்டு அதை நிரப்ப வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை மன்னித்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கி தந்தருள்வானாக. அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தவருக்கும் மிகுந்த பொறுமையை தருவானாக. அனைவருக்கும் எங்கள் சலாம்.
வஸ்ஸலாம்.
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
மற்றும் குடும்பத்தினர்,
எஸ்.கே. ஹவுஸ்,
கொச்சியார் தெரு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross