மர்ஹூமா அவர்களை பொருந்திக்கொள் கருணை மிகு ரஹ்மானே ! posted byK.V.A.T.HABIB (qatar)[21 January 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25154
எங்கள் சாளை மாமா மர்ஹூம் அவர்களின் அருமை மகளார் , எங்கள் மச்சி அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லணும் என்றே தெரியல. எங்கள் தாயாரின் காக்கா மகள், இளம் வயது ...அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றதை நினைக்கும் போது , அவர்கள் முந்திக்கொண்டார்கள் , நாம் சற்று பிந்தி இருக்கிறோம் . எப்படியும் என்றோ ஒரு நாள் இறைவனின் அழைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் ஏற்றே ஆகணும். கழா கத்ரின் படி நிகழ்ந்தமைக்கு பொறுமையை கடைபிடிக்குமாறு எங்கள் குடும்பத்தார் அனைவரையும் அன்போடு வேண்டுகிறேன்.
கிருபையுள்ள ரஹ்மான் , அன்பு மனைவியை இழந்து தவிக்கும் அருமை கத்தீப் காக்கா , எங்கள் மச்சான் மார்கள், மச்சிமார்கள் மற்றும் குடும்பத்தார் அனைவரின் இதயங்களையும் சப்ரன் ஜமீலாவெனும் அழகிய பொறுமையை கொண்டும் ஆறுதல் அடையச்செயவானாகவும். மேலும் , மர்ஹூமா மச்சி அவர்களின் அனைத்து நல்ல அமல்களையும் அங்கீகரித்து , அவர்களின் ஜனாஸாவை எம்பெருமானார் அவர்களின் திருக்கரத்தால் கப்ரில் வைக்கப்பட்டவர்களாகவும் , கப்ரில் விசாலத்தையும் , அல்லாஹ்வின் ஜோதியையும் (பிரகாசத்தையும்) பெற்று, மறுமை நாளில் , பெருமானார் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஷபாஅதோடு மேலான சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தவ்சில் குடிப்புகுத்துவானாகவும் , ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன். என்று இருகரம் ஏந்தி கண்ணீர் மல்க வல்லோன் அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.
குடும்பத்தார் அனைவரும் சப்ர் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் எங்களின் நற் ஸலாத்தினையும் (அஸ்ஸலாமு அலைக்கும்) சமர்பிக்கிறோம்.
மிகவும் வருத்தத்துடன் ,
K.V.A.T.குடும்பத்தினர் ,
சாளையார் குடும்பத்தினர் ,
காயல்பட்டணம்
மற்றும் கத்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross