மறக்க முடியாத மக்கீ புகாரீ மாமா! posted byS.K.Salih (Kayalpatnam)[22 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25186
மக்கீ புகாரீ மாமாவுடன் பழகிய யாரும் - சாளை ஜியாவுத்தீன் காக்கா சொன்னது போல - அவருடன் ஒரு முறை பழகியிருப்பினும் - எளிதில் மறந்திட இயலாதவர்!
அவர்கள் இருக்குமிடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!
கேலி - கிண்டல்களுக்குக் குறைவிருக்காது!
ஏற்கனவே எனக்கு மிகவும் நெருக்கமெனினும், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான கடற்கரை தொழுமிடத்தில் நான் இமாமாக இருந்த காலங்களில், அதனை நிர்வகித்த பலருள் ஒருவரான மக்கீ மாமாவுடன் மிகவும் நெருக்கம் கிடைத்தது... அக்காலங்களில் தனது மனக்குறைகளையெல்லாம் என்னிடம் சொல்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள்.
தனது உடல் பலவீனங்களை அவர்களாக வாய்விட்டுச் சொல்லாமல் யாராலும் அறிந்திட இயலாது. அத்தனை சாமர்த்தியமாக அவற்றை மறைத்தே வைத்திருந்துவிட்டார்கள்.
மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைத்தவர் இப்போது அழ வைத்துவிட்டார்.
கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கியருள்வானாக.
அவர்களின் அன்பு மக்களான நண்பன் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன், தம்பி மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, மருமகனான லக்கி மக்கீ உள்ளிட்ட - அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross