Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[08 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26088
நகர் மன்ற தலைவரும் 18 உறுப்பினர்களும் பொது மக்கள் இல்லையா, மின்வாரியத்தில் பணி புரிகின்றவர்கள் பொது மக்கள் இல்லையா, இவர்களுக்கு ஏன் இந்த பகலில் எரியும் மின் விளக்கு தெரிவதில்லை! இரவில் மாத கணக்கில் எரியாமல் இருக்கும் தெரு விளக்குகள் எத்தனை தெரியுமா?
கடமை உணர்வு இல்லாதவர்கள், யாருக்கோ வந்த வினை என்று இருப்பவர்கள், நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள் என்று விரக்தி அடைந்தவர்கள் நிறைந்து காணப்படும் நமது நாட்டில் ஊடகங்கள் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டியது உள்ளது. அப்போதும் நடவடிக்கை எடுப்பார்களா.
ஆர்ப்பாட்டம் போராட்டம் வேலை நிறுத்தம் சாலை மறியல் என்று ஏதாவது நடக்கவேண்டும் அங்கே சமூக விரோதிகள் புகுந்து சொத்துக்களுக்கு உயிர்களுக்கு உடமைகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டும் காவல் துறை வரவேண்டும் கலெக்டர் வரவேண்டும் சமாதானம் பேசவேண்டும். கூட்டம் கலைந்து செல்லவேண்டும் இதெல்லாம் நடந்த பிறகு அரசு விழித்துக் கொள்ளும். இதுதானே இன்று நாட்டில் நடக்கிறது..
இந்த மாதிரி சமூக அவலங்களை அவ்வப்போது வெளியிட்டு அரசின் கவனத்தை கவரும் இணையதளங்களை பாராட்டுகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross